Wednesday 31 December 2014

விஞ்ஞானம் - பாகம்-1

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
விஞ்ஞானம் பகுதி-1
Geographic Coordinate System புவியியல் அளக்கூறு:
நாம் பள்ளிப்பருவத்தில் கிராப் graph வரைந்திருப்போம். சிறுதும் பெரிதுமாக பல சதுரங்கள் இருக்கும் ஒரு தாளில் முதலில் புள்ளிகளை வைப்போம் பின்னர் அப்புள்ளிகளை இணைத்து கோடுகள் வரைவோம். பின்னர் அந்த கோட்டின் நீளத்தை அளப்போம். இவ்வாறு நாம் செய்ததன் அடிப்படை என்ன? பார்ப்போம்!
graph தாளில் x அச்சு y அச்சு என இரண்டு அச்சுக்கள் இருக்கும். குறுக்கே இடப்பட்டுள்ள கோடுகளுக்கு x அச்சு எனவும் நெடுக்கே இடப்பட்டுள்ள கோடுகளுக்கு y அச்சு எனவும் பெயர். இப்படி பல x கோடுகளும் பல y கோடுகளும் ஒரு graphல் இருக்கும். ஒரு x அச்சும் ஒரு y அச்சும் சந்திக்கும் இடம் ஒரு புள்ளி ஆகும். உதாரணமாக 4ம் x அச்சும் 5.6ம் y அச்சும் சந்திக்கும் புள்ளியை (4, 5.6) என்று அழைப்போம். ஆக graph ல் எந்த ஒரு புள்ளியை குறிக்க வேண்டுமாயினும் அதற்கு இரண்டு எண்கள் கொண்ட ஒரு கூறு (coordinate) வேண்டும். இதே போல் பூமியில் எந்த ஒரு இடைத்தை குறிக்க வேண்டுமாயின் இரண்டு புள்ளிகள் வேண்டும்.
பூமியில் கற்பனையாக குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் வரைந்துள்ளனர். குறுக்காக வரையப்பட்ட கோடு, குறுக்கை, நிரைக்கோடு அல்லது அட்சரேகை latitude என்றழைக்கப்படுகிறது. இதனை நாம் graphல் x அச்சுக்கு இணையானதாக கொள்ளலாம். குறுக்கைகள் கிழக்கிலிருந்து மேற்காக வரையப்பட்டுள்ளன. எனவே ஒரு குறுக்கையிலிருந்து அடுத்த குறுக்கை வடக்கிலோ தெற்கிலோ இருக்கும். குறுக்கைகள் வடக்கு அல்லது தெற்கு திசைகளை குறிப்பதாக உள்ளன.
நெடுக்காக வரையப்பட்ட கோடு நெடுக்கை, நெடுங்கோடு அல்லது தீர்க்கரேகை longitude என்றழைக்கப்படுகிறது. இதனை நாம் graphல் y அச்சுக்கு இணையானதாக கொள்ளலாம். நெடுக்கைகள் வடக்கிலிருந்து தெற்காக வரையப்பட்டுள்ளன. எனவே ஒரு நெடுக்கயிலிருந்து அடுத்த நெடுக்கை கிழக்கிலோ தெற்கிலோ இருக்கும். நெடுக்கைகள் கிழக்கு மேற்கு திசைகளை குறிப்பதாக உள்ளன.
http://cnx.org/resources/19df315f9bc192ddf7b482d0a9943924/Picture%2010.png
http://knot-workin.com/images/client/Latitude-longitude-grid.gif
Http://www.hicksvillepublicschools.org/cms/lib2/NY01001760/Centricity/Domain/1236/latitude_longitude.gif
http://www.thestargarden.co.uk/images/fig8-2.jpg
http://giscommons.org/files/2009/08/3.21.gif
Graphல் ஒரு சதுரம் 1cm x 1 cm அளவு கொண்டது. அதாவது x அச்சு 3 என்பது 0 அச்சிலிருந்து 3 cm தூரத்தில் இருக்கும். ஆனால் பூமியில் உள்ள ரேகைகள் மீட்டர் அல்லது கிலோ மீட்டர் கணக்கில் வரையப்பட்டவை அல்ல. டிகிரி கணக்கில் வரையப்பட்டவை. இதற்கு காரணம் பூமி கோள வடிவில் இருப்பதுவே. Latitude 8 என்றால் 0 டிகிரி குறுக்கையிளிருந்து 8கிமி என்று பொருள் அல்ல. 0 டிகிரி மையத்திலிருந்து 8 டிகிரி என்று பொருள்.
எந்த ஒரு வட்டத்தையும் 360 டிகிரியாக பிரிப்பதை போன்று நெடுக்கைகளை 360 டிகிரியாக பிரித்துள்ளனர். இதை 0 இலிருந்து 360 வரை இடாமல் வசதிக்காக -180 இலிருந்து +180 ஆக பிரித்துள்ளனர். குறுக்கைகளை 360 டிகிரியாக பிரிக்காமல் 180 டிகிரிகளாக பிரித்துள்ளனர். இதனடிப்படையில் 0 டிகிரி குறுக்கை பூமியில் மத்தியில் செல்கிறது. இது பூமத்திய ரேகை என்றழைக்கப்படுகிறது. +90 டிகிரி குறுக்கை சரியாக வடதுருவத்திலும் -90 டிகிரி குறுக்கை தென் துருவத்திலும் அமைந்துள்ளது. 0 டிகிரி நெடுக்கை லண்டன் க்ரெனிச் வழியாக செல்கிறது. இது முதன்மை நெடுக்கை என்றழைக்கப்படுகிறது. +180 டிகிரி நெடுக்கையும் -180 டிகிரி நெடுக்கையும் ஒன்றேதான். பூமி உருண்டையாக இருப்பதே இதற்கு காரணம்.
பூமத்திய ரேகையும் முதன்மை நெடுக்கையும் சந்திக்கும் இடத்தை வரைபடத்தின் மையமாக கொள்ளலாம். அதாவது (0, 0) புள்ளி. சென்னையின் புவியியல் கூறு +13.08, +80.27 ஆகும். அதாவது சென்னை பூமியின் புற மையத்திலிருந்து வடக்கே 13.08 டிகிரியிலும் கிழக்கே 80.27 டிகிரியிலும் அமைந்துள்ளது. லண்டன் +51.5072, -0.1275. ப்ரெசீல் -15.7833, -47.8667
Time zone நேர மண்டலம்:
பூமி ஒரு முறை சுழலுவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. பூமியில் மொத்த டிகிரி 360. அதாவது பூமி 360 டிகிரி சுற்றுவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. அப்படியானால் ஒரு டிகிரி சுற்ற (24 × 60 ÷ 360 = 4min) 4 நிமிடங்கள் ஆகின்றன. 8 டிகிரி நெடுக்கையிலிருக்கும் ஒரு ஊருக்கும் 7டிகிரி நெடுக்கையிலிருக்கும் ஒரு ஊருக்கும் சூரிய உதயத்தில் 4 நிமிட வித்தியாசம் இருக்கும்.
எந்திர கடிகாரங்கள் கண்டு பிடிக்கும் முன் நிழல் கடிகாரத்தை மனிதர்கள் பயன் படுத்தி வந்தனர். இவை ஊருக்கு ஊர் வெவ்வேறு நேரத்தை காட்டிகொண்டிருக்கும். ஊட்டிக்கும் சென்னைக்கும் சூரிய உதயத்தில் 16 நிமிட வித்தியாசம் உள்ளது. எனவே ஊட்டியில் சூரிய கடிகாரம் 1மணியை காட்டினால் சென்னையில் சூரிய கடிகாரம் 1:16 மணியை காட்டும். ஒரே நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் இரு ஊர்களில் வெவ்வேறு நேரம் இருந்தால் அது நிர்வாகத்திற்கு உகந்ததாக இருக்காது. இது தகவல் தொடர்பிலும் போக்குவரத்திலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே ஒரே நிர்வாக கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் ஒரே கடிகார நேரம் இருக்கவேண்டும்.
பூமி எப்போதும் சுற்றிக்கொண்டிருக்கிறது. எல்லா வினாடிகளிலும் பூமியில் சூரிய உதயமும் மறைவும் நிகந்து கொண்டே இருக்கின்றன. எனவே ஒரு நாளின் சூரியன் முதலில் எங்கே உதிக்கிறது என கூற இயலாது. அதாவது திங்கள் கிழமையின் சூரிய உதயத்தை எந்த நாட்டினர் முதலில் பார்கின்றனர் என்று கூறவே இயலாது. ஆனால் இந்த நாடுதான் முதலில் சூரிய உதயத்தை பார்க்கிறது எனவே திங்கள் எனும் நாள் இந்த நாட்டிலிருந்துதான் துவங்குகிறது என்ற நிர்ணயம் இல்லாவிடில், ஒரு சர்வதேச நேர கட்டுப்பாட்டை கொண்டு வர இயலாது. அதே வேளையில் சூரியன் இங்கு தான் முதலில் உதிக்கிறது என்று எந்த இடத்தை கூறினாலும் அது தவறாகவும் அமைந்து விடாது.
இதன் அடிப்படியில் ஒரு நாள் எங்கே தொடங்குகிறது என்பதை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு முடிவு செய்ய வேண்டும். அந்த இடத்தில ஒரு நாள் ஆரம்பம் ஆகும் அந்த இடத்திற்கு கிழக்கே உள்ள பகுதிகள் முந்தய நாளில் இருக்கும். ஒரு நாளில் சூரியன் முதன் முதலில் இந்தியாவில் உதிக்கிறது என வைத்துக்கொண்டால் இந்தியாவும் அதன் மேற்கே உள்ள பாகிஸ்தானும் திங்கள் கிழமையில் உள்ள அதே வேளையில் இந்தியாவிற்கு கிழக்கேயுள்ள வங்கதேசமும் மலேசியாவுக்கும் ஞாயிற்று கிழமையாக இருக்கும். இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே நாளை முடிவு செய்யும் இந்த கோடு நிலப்பரப்பு அதிகம் இல்லாத கடல்பரப்பில் அமைந்தால் அது சரியாக இருக்கும் என்று கருதினர்.
எந்திர கடிகாரங்கள் கண்டு பிடிக்கும் முன் நிழல் கடிகாரத்தை மனிதர்கள் பயன் படுத்தி வந்தனர். நிழ கடிகாரம் கட்டுவது சூரிய நேரம் ஆகும். இவை ஊருக்கு ஊர் வெவ்வேறு நேரத்தை காட்டிகொண்டிருக்கும். ஊட்டிக்கும் சென்னைக்கும் சூரிய உதயத்தில் 16 நிமிட வித்தியாசம் உள்ளது. எனவே ஊட்டியில் சூரிய கடிகாரம் 1மணியை காட்டினால் சென்னையில் சூரிய கடிகாரம் 1:16 மணியை காட்டும். ஒரே நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் இரு ஊர்களில் வெவ்வேறு நேரம் இருந்தால் அது நிர்வாகத்திற்கு உகந்ததாக இருக்காது. இது தகவல் தொடர்பிலும் போக்குவரத்திலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே ஒரே நிர்வாக கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் ஒரே கடிகார நேரம் இருக்கவேண்டும்.

1840 களிலேயே ஆங்கிலேயர்கள் பிரிட்டனின் சீரான நேரத்தை (standard time) வரையறுத்து விட்டனர். இதை அவர்கள் கடல் பயணத்திற்கும் புகை வண்டி கால அட்டவணைக்கும் பயன்படுவதற்காக செய்தனர். மேலும் க்ரெனிச் வழியாக செல்லும் நெடுக்கையை மையமாக வைத்து அவர்கள் ஜியோக்ரபிக் கோஆர்டினேட் சிஸ்டத்தையும், வரைபடத்தையும் உருவாக்கிவிட்டனர். உலகின் பெரிய வல்லரசாகவும், சூரியன் மறையாத நாடு என்று சொல்லும் அளவுக்கு உலகெங்கும் காலணி நாடுகளை கொண்டிருந்த கிரேட் பிரிட்டன்தான் அன்று கடல் வாணிபத்தில் கோலோச்சி நின்றது. உலகில் ஓடிக்கொண்டிருந்த கப்பல்களில் மூன்றில் இரண்டு பகுதி இவர்கள் க்ரெனிச்சை மையமாக வைத்து உருவாகியிருந்த வரைபடத்தை பயன்படுத்திதான் இயங்கிகொண்டிருந்தன.

ஆனால் அமெரிக்காவில் 1884 வரை சீரான நேரம் செயல்படுத்தப்படவில்லை. அமெரிக்காவில் நேரமாற்றம் பெரும் பிரச்சனையாக இருக்கவே அமெரிக்க பிரதமர் ஆர்தரின் விருப்பத்தில் உலகம் முழுமைக்கும் நேர மண்டலம் சீர் செய்யப்பட வேண்டும் என 1884 அக்டோபரில் 26 நாடுகளிலிருந்து 41 பிரதிநிதிகளை அழைத்து  ஒரு சர்வதேச கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் க்ரெனிச் 0° தீர்க்க ரேகையை முதன்மை நெடுக்கையாக (prime meridian) வைத்து 180 டிகிரி நெடுக்கையை (எதிர் நெடுக்கை antemeridian) சர்வதேச தேதிக்கோடாக முடிவு செய்தனர். ஏற்கனவே க்ரெனிச்சை மையமாக கொண்ட வரைபடம் பிரபலாமாக இருந்தது. உலகத்தில் ஓடும் மொத்த கப்பல்களைவிட பிரிட்டனின் கப்பல்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தன. அவை(Greenwich) க்ரெனிச்சை மையமாக வைத்துதான் இயங்கின. மேலும் க்ரெனிச்சை 0டிகிரியாக கொண்டால் 180டிகிரியாக வரும் பகுதி ஓரளவுக்கு நிலப்பரப்பு இல்லாமல் இருந்தது. எனவேதான்  க்ரெனிச்சை  தேர்ந்தெடுத்தனர். க்ரெனிச்சிற்கு போட்டியாக பிரான்சின் பாரிஸ் மெரிடியன், பெல்ஜியத்தின் அன்ட்வேர்ப் மெரிடியன் மற்றும் ஹெயரோ தீவின் பெர்ரோ மெரிடியன் ஆகியவையும் இருந்தன. மேலும் அமெரிக்காவின் மேரிடியனும் போட்டியில் இருந்தது. முதன்மை நெடுக்கையாக க்ரெனிச் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதன் எதிர் நெடுக்கையான 180டிகிரி நெடுக்கை சர்வதேச தேதிக்கோடாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எந்த ஆய்வோ அல்லது வரலாற்றுக்குறிப்புகளின் அடிப்படையிலோ செய்யப்படவில்லை. முழுக்க முழுக்க க்ரெனிச்சின் பிரபலமும் ஏற்கனவே அது அதிகப்படியாக பயன்பாட்டில் இருந்ததுமே காரணம். இந்த கோடு சர்வதேச தேதிக்கோடு என்றழைக்கப்படுகிறது. International Date Line. இதனடிப்படையில் நியுசிலாந்து நாட்டினர் ஒரு நாளின் சூரிய உதயத்தை முதலில் பார்ப்பர். இந்த 180 டிகிரி கோட்டிலிருந்து மேற்கே செல்லும் ஒவ்வொரு 15 டிகிரி நெடுக்கைக்கும் ஒவ்வொரு மணிநேரம் அதிகரிக்கும். இப்படி ஒவ்வொரு 15டிகிரிக்கும் ஒரு மணிநேர வித்தியாசத்தை ஏற்படுத்தி நேரக்கட்டுப்பட்டை அமைப்பது தான் time zones நேர மண்டலங்கள் என்றறியப்படுகின்றன.
நேரமண்டலங்களை கணக்கிடும் பார்முலா பின்வருமாறு.:
Time zone = longitude ÷ 15
நேரமண்டலம் = நெடுக்கை ÷ 15
இந்தியாவின் நேர மண்டலம் +5.5 இது சரியா என்று பார்ப்போம். மேலுள்ள பார்முலாவில் இதை இட்டுநோக்குவோம்
Longitude = time zone × 15 = 5.5 × 15 = 82.5
82.5° தீர்க்க ரேகை இந்தியா வழியாக செல்கிறது. இந்தியா சரியான நேரமண்டலத்தை தேர்ந்தெடுத்துள்ளது
இந்த பார்முலாவை கொண்டுதான் நேரமண்டலங்கள் வரையறுக்கப்பட்டன. அந்த நாட்டின் வழியாக செல்லும் முக்கியமான தீர்க்க ரேகையை 15ஆல் வகுத்தால் அந்த நாட்டிற்கான நேர மண்டலம் கிடைக்கும். எனினும் பல நாடுளில் அவர்கள் நாட்டின் வழியாக செல்லும் எந்த நெடுக்கையும் ஒரு முழு எண்ணை நேர மண்டலமாக தருவதில்லை. முழு என் என்பது 3, 6, 8 என்பவை ஆகும். ஆனால் சில நாடுகளின் நெடுக்கை தசம பின்ன எங்களை நேர மண்டலமாக தரும். எடுத்துக்காட்டிற்கு இந்திய நேரமண்டலம் 5.5. இந்தியாவில் 4.5, 5, 5.5, 6 & 6.5 ஆகிய நேரமண்டலங்களுக்கான நெடுக்கைகளும் செல்கின்றன. இந்திய அவற்றின் மையத்திலிருக்கும் 5.5ஐ தேர்ந்தெடுத்தது. இந்தியா “ஐந்தரை” எனும் பின்னதை ஒரு பிரச்சனையாக பார்க்கவில்லை. அனால் சில நாடுகள் நேரமண்டலங்கள் முழு எண்ணாக வருவதை விரும்பி அவர்கள் நாட்டில் செல்லாத ஒரு நெடுக்கையை தேர்ந்தெடுத்துள்ளன.
கத்தர்:
கத்தரின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லையில் செல்லும் நெடுக்கைகள் 50.7° & 51.7°
எனவே கத்தரின் நேர மண்டலம் 3.38 (50.7 ÷ 15) முதல் 3.44 (51.7 ÷ 15) க்குள் இருந்திருக்க வேண்டும்
கத்தர் 3.5 நேரமண்டலத்தை எடுத்திருக்க வேண்டும் ஆனால் தவறாக நேர மண்டலம் 3 ஐ எடுத்துவிட்டது.
UAE:
UAE ன் கிழக்கு மற்றும் மேற்கு எல்லையில் செல்லும் நெடுக்கைகள் 51.6° & 56.3°
எனவே UAEன் நேர மண்டலம் 3.44 முதல் 3.75 க்குள் இருந்திருக்க வேண்டும்
UAE 3.5 நேரமண்டலத்தை எடுத்திருக்க வேண்டும் ஆனால் தவறாக நேர மண்டலம் 4 ஐ எடுத்துவிட்டது.
உங்கள் நேரமண்டலம் சரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை எளிமையாக அறிந்து கொள்ள: உங்களது லுஹ்ர் தொழுகை நேரம் 12மணியை ஒட்டியதாக இருக்க வேண்டும். காலநிலை மாற மாற லுஹ்ர் தொழுகையின் நேரம் மாறிக்கொண்டிருக்கும். அப்படி மாறினாலும் குறைந்தது வருடத்திற்கு இருமுறை உங்கள் லுஹ்ர் பாங்கு நேரம் சரியாக 12மணிக்கு வந்தால் உங்கள் நேரமண்டலம் சரியானது. வருடத்தில் எந்த நாளுமே உங்கள் லுஹ்ர் தொழுகை நேரம் 12மணிக்கு வரவில்லை என்றால் நேரமண்டலம் தவறானதாகவே உள்ளது.
இப்படி நேர மண்டலம் தவறாக இருப்பதால் ஏதாவது பெரிய பாதிப்பா என்றால் பொதுவாக எந்த பாதிப்பும் இல்லை. அதனால் ஏற்பட்ட ஒரு பெரிய குழப்பத்தை கீழே விளக்கியுள்ளோம்
தொடர்ந்து படிக்க ... விஞ்ஞானம் - பாகம்-2 >> http://hafsa13.blogspot.com/2015/07/astro2.html