Saturday 25 July 2015

புவிமைய சங்கமமா? புவிப்பரப்பு சங்கமமா?

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
ஹிஜ்றா கமிட்டியினர் வார்த்தைக்கு வார்த்தை சங்கமம்... சங்கமம்... என்று  சொல்லுவதை பார்த்திருப்பீர்கள். இதை சினிமா பாடல் என்று ஆரம்ப காலத்தில் நாம் நினைத்திருப்போம். ஆனால் இது கஞ்ஜங்ஷன் எனும் வார்த்தையை மொழிப்பெயர்க்க தெரியாமல் ஹிஜ்ராவினர் செய்த அறியாமைத்தனமாகும். அதற்கு சரியான பெயர் சூரிய-சந்திர புவி மைய சந்திப்பு என்பதாகும். இந்த புவிமைய சந்திப்பு நடந்த அடுத்த விநாடி பிறை பிறப்பதாகவும் சொல்கின்றனர். இது என்ன புவிமைய சந்திப்பு? பிறை பிறப்பதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?
ஹிஜ்ராவினரிடம் கேட்டால் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வுக்கு புவிமைய சந்திப்பு என்பார்கள். கிட்டத்தட்ட உண்மைதான். சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே தளத்தில் நேராக வருவது புவிமைய சந்திப்பாகும். இதற்கும் மேலாக இவை நேர்கோட்டில் வந்தால் சூரிய கிரகணம் நிகழும். பொதுவாக அமாவாசை எனும் நிகழ்வை நம்மால் கண்ணால் பார்க்க இயலாது. ஆனால் கிரகணம் நடக்கும்போது நம்மால் அமாவாசையை கண்ணால் பார்க்க இயலும். சூரியனை சந்திரன் மறைப்பதை நம்மால் கண்ணால் பார்க்க இயலும்.
இங்கே நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அமாவாசை முடிந்த அடுத்த வினாடியே பிறை பிறந்துவிடுகிறதா என்பதையே. பிறை என்பதே கண்ணுக்கு தெரியும் காட்சிதான். கண்ணுக்கு தெரியாத சந்திரனின்ஒளி பிறையாகாது. ஆனால் அமாவாசை முடிந்த அடுத்த வினாடியே சாந்தினின் ஒளி விழும் பகுதி பூமியை நோக்கி சற்று திரும்புவதால் விஞ்ஞானம் இதை பிறை பிறந்துவிட்டதாக சொல்கிறது. இவர்கள் விஞ்ஞானத்தின் பால் நாட்டம் கொண்டதால் அமாவாசை எனும் நிகழ்வை பிறை பிறக்கும் நிகழ்வாக எடுக்கிறார்கள்.
அடுத்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது இவர்கள் சொல்வதைப் போல அமாவாசை என்பது உலகம் முழுமைக்கும் ஒரே வினாடியில் நடந்துவிடுகிறாதா என்பதை. இதை தெரிந்துகொள்வதற்கு நாம் கிரகணங்களை நாடுவோம். சூரிய கிரகணம் என்பது கண்ணுக்கு தெரியும் அமாவாசை என்பதை தெரிந்துகொண்டோம். எனில் சூரியகிரகணம் எவ்வளவு நேரம் கண்ணுக்கு தெரிகிறதோ அத்துணை நேரம் அமாவாசை நீடிப்பதாக பொருள்.
இது கடந்த செப்டம்பர் -1 2016 தேதி நடந்த அமாவாசையை பூமியில் யாரெல்லாம் பார்த்தார்கள் என்பதன் வரைபடமாகும். வண்ணமிடப்பட்ட பகுதிகளில் சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். ஆனால் அதிலும் நடுவே கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் கோட்டில் எந்தெந்த பகுதிகள் இருக்கின்றனவோ அவை முழு சூரிய கிரகணத்தை பார்த்தது. இந்நிலையில் அன்று உலகில் முதன்முதலாக சூரிய கிரகணத்தை பார்த்தது கேபன் நட்டு மக்கள் அவர்கள் உலக நேரம் 7:47க்கு முழு கிரகணத்தை பார்த்தார்கள். அந்நேரம் மடகாஸ்கர் மக்களுக்கு முழுகிரகணமல்ல. பின்னர் 2மணி நேரத்திற்கு பிறகு மடகாஸ்கர் மக்கள் உலக நேரம் 9:52க்கு கிரகணத்தை பார்த்தார்கள். அப்போது கேபன் நட்டு மக்களுக்கு முழு கிரகணமல்ல. அமாவாசை உலகம் முழுமைக்கும் பொதுவானது என்றால் கிரகணங்கள் ஏன் உலகம் முழுமைக்கும் பொதுவாக நிகழ்வதில்லை?
மேற்சொன்ன கிரகண வரைபடத்தில் முக்கால்வாசி கிரகணம் கடல் பகுதியில் விழுந்தது. இன் ஷா அல்லாஹ் வரும் 202௦ ஜுன் மாத கிரகணத்தைப் பாருங்கள்.
காங்கோவில் தொடங்கிய கிரகணத்தை காங்கோ மக்கள் பார்த்த பல மணிநேரதுக்குப்பின் குவாம் மக்கள் பார்ப்பார்கள். அதாவது காங்கோவுக்கு அமாவாசை நடந்து பல மணி நேரத்துக்குப்பின் குவாமுக்கு அமாவாசை நடக்கிறது. உலகுக்கெல்லாம் எப்படி ஒரே வினாடியில் அமாவாசை என்கிறார்கள்?
நாம் மேலே பார்த்த அனைத்தும் பூமியின் மேற்பரப்பில் இருக்கும் நாடுகளுக்கான கணக்குகள். ஆனால் அமாவாசை தேதிகள் என்று நாசா இணையதளத்தில் வந்தவை பூமியின் மையத்தில் இருக்கும் நரக நெருப்புக்கான கணக்கு. நாம் மேலே சொன்ன கேபன், மடகாஸ்கர், குவாம் காங்கோ மேலும் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகள் பூமியின் மேல் பகுதியில் இருப்பவை. ஆனால் பூமிக்கு உள்ளே நெருப்புக்குழம்பால் ஆனா பூமியின் மையப்பகுதி இருக்கிறது. இங்கே பாறைகள் உருகி குழம்பாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த குழம்புக்கு மத்தியில் தான் பூமியின் மையப்புள்ளி இருக்கிறது. இந்த மையப்புள்ளியை எடுத்து அமாவாசையைக் கணக்கிட்டால் அது ஒரு வினாடியாக தான் இருக்கும். உதாரணாமாக கேபன் நாட்டை மட்டும் கணக்கிலெடுத்தால் அங்கே ஒரே ஒரு வினாடிதான் கிரகணம் உச்சத்தில் இருக்கும். இதே போல பூமியின் மையத்தில் இருக்கும் நரக நெருப்பை கணக்கில் எடுத்தால் அமாவாசை என்பது ஒரே ஒரு வினாடி மட்டுமே நிகழும் நிகழ்வாக இருக்கும்.
உண்மையில் பூமியில் அமாவாசை ஒரே வினாடியில் நிகழும் நிகழ்வல்ல. ஏறக்குறைய 3மணி நேரம் 45 நிமிடங்கள் நிகழும் நிகழ்வாகும். இனி பிறை பிறத்தலை பார்ப்போம்.
முதலில் நாம் எடுத்துக்கொண்ட கேபன் உதாரணத்தை எடுங்கள். கேபனில் 7:47க்கு அமாவாசை நடக்கிறது விஞ்ஞானத்தின்படி அமாவாசை முடிந்த அடுத்த வினாடி பிறை பிறப்பதாக வைத்துகொண்டால் 7:47:01 க்கு கேபனில் பிறை பிறக்கிறது. ஆனால் அப்போது உலகில் வேறு எங்கும் பிறை பிறக்கவில்லை. குறிப்பாக மடகாஸ்கரில் அப்போது பழைய பிறையாக இருக்கிறது. பின்னர் மடகாஸ்கரில் 9:52க்கு பிறை பிறக்கிறது. உலகுக்கெல்லாம் ஒரே நேரத்தில் பிறை பிறப்பதாக சொல்வது பொய்.
இவ்வாறு நாம் உண்மையை சொல்லும்போது ஹிஜ்ராவினர் ஒரு வாதத்தை வைப்பார்கள். கேபனுக்கும் மடகாஸ்கருக்கும் வெவ்வேறு நேரத்தில் அமாவாசை ஏற்பட்டாலும் ஒரே நாளில்தனே நடக்கிறது என்பார்கள். அதையும் பார்ப்போம் வாருங்கள்.
https://yy50ywrzdc5jb200.g00.timeanddate.com/g00/1_TU9SRVBIRVVTMSRodHRwczovL2MudGFkc3QuY29tL2dmeC9lY2xpcHNlczIvMjAxNjAzMDkvcGF0aC03NjAucG5nP2kxMGMubWFyay5pbWFnZS50eXBl_$/$/$/$/$
இது கடந்த மார்ச் 8 & 9ம் தேதிகளில் நடந்த கிரகண அமாவாசை வரைபடம்
இந்த கிரகணத்தை இந்தோனிசிய முதல் ஹவாய் தீவு மக்கள் வரைப் பார்த்தார்கள். ஆனால் இந்தோனேசியாவில் 9 மார்ச் புதன் கிழமையிலும் ஹவாய் தீவில் 8 மார்ச் செவ்வாய்க்கிழமையிலும் பார்த்தார்கள். அதாவது கிரகணம் எனும் அமாவாசை பூமியில் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் நடந்துள்ளது. இதற்கும் ஹிஜ்ராவினர் பாரல்லக்ஸ் எரர் என்று வானியலுக்கு தொடர்பில்லாத உளறல்களை பதில்களாக கொடுத்துள்ளனர். அதன் உண்மையான விளக்கத்தை இங்கே பார்க்க Parallax Errorம் அமாவாசைப் பிறையும்
மேலும் அதிகமான விஞ்ஞான தகவல்கள் தேவைப்படுபவர்கள் மட்டும் தொடர்ந்து வாசியுங்கள்.
புவிமைய சந்திப்பு என்பது “பூமியின் மையப்புள்ளியும் சந்திரனின் மையப்புள்ளியும் சூரியனின் மையப்புள்ளியும் போலரிஸ் எனும் நட்சத்திரத்திலிருந்து பார்க்கும்போது ஒரே நேர்கோட்டில் வருவதாகும்”. இது எல்லா (சந்திர) மாதத்திலும் ஒரு முறை நிகழும். இதன் வேறு பெயர் (Astronomical new moon) வானியல் அமாவாசை.
அதென்ன வானியல் அமாவாசை?
அமாவாசை என்றாலே ஒரு நாள் என்று தான் நம் எல்லோர் மனதிலும் தோன்றும். அமாவாசை என்றாலே சந்திரன் முழுக்கருப்பாக இருக்கும் ஒரு முழுமையான நாள் என்று நாம் கருதி வருகிறோம். அவ்வாறல்ல! வானியல் அமாவாசை என்பது இந்த மூன்று கோள்களும் ஒரே நேர்தளத்தில் வரும் அந்த ஒரு வினாடி நிகழ்வை குறிப்பதாகும். மேலும் இது விஞ்ஞானிகளால் விஞ்ஞான கணிதத்திற்கு பயன்படுத்தப்படுவதால் இது வானியல் அமாவாசை என்ற பெயரைப் பெற்றது
இப்போது உண்மையாகவே இது ஒரு வினாடி தான் நிகழ்கிறதா மேலும் அந்த ஒரு வினாடியிலேயே பிறை பிறந்து விடுகிறதா என்றும் அலசுவோம்.
பூமி-சந்திரன்-சூரியன் ஆகியவை அவற்றின் மையப்புள்ளிகளில் நேர்கோட்டில் இருக்கும் காட்சி. கவனம்! இது பூமியின் வடதுருவத்திற்கு மேலாக வான் வெளியில் இருந்து பார்க்கப்படும் காட்சி. தென்துருவத்திற்கு மேலிருந்து பார்த்தலும் இப்படி தெரியும். துருவத்திற்கு மேல் அல்லாமல் பூமியின் மையப்பகுதிக்கு மேலிருக்கும் வான் வெளியில் இருந்து பார்த்தல் இவை நேர்கோட்டில் இருப்பதில்லை.
பூமியின் வட்டபாதைக்கு மேல் இருந்து பார்த்தால் இவ்வாறு தெரியும். சந்திரனும் சூரியனும் நேர்கோட்டில் இருப்பதில்லை. சந்திரனும் சூரியனும் எங்கிருந்து பார்த்தாலும் ஒரு நேர்கோட்டில் இருக்கும் நிலைமை வரும்போது சந்திரனின் நிழல் பூமியின் மீது விழும் சூரிய கிரகணம் ஏற்படும்.  இதை “பிறையின் விஞ்ஞானம் பாகம் ஒன்றில்” தெளிவுபடுத்தி இருப்போம்.
இப்போது கமிட்டி சொல்வது போல் புவிமைய சந்திப்பு என்பது ஒரு வினாடி மட்டும் நிகழுமா? அது பூமியின் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே நிகழுமா என்று பாப்போம்
இந்த படத்தை தெளிவாக பாருங்கள். பூமி –சந்திர-சூரிய மைய சங்கமத்தின் போது பூமியின் ஒரே ஒரு புள்ளி மட்டும் அதே நேர்கோட்டில் இருக்கிறது. அதற்கு மேற்கு பகுதி ஏற்கனவே புதிய பிறையை பார்த்து கொண்டுதான் இருக்கிறது மேலும் அதற்கு கிழக்கே உள்ள பகுதிகள் பழைய பிறையையும் பார்க்கிறது. இதை இந்த படத்தை சற்று சிந்தித்து பார்த்தாலே விளங்கும். விளங்கவில்லையா? கீழுள்ள படத்தை பாருங்கள்.
புவிமைய சந்திப்பு நடப்பதற்கு முன்னால் சந்திரனும் சூரியனும் b எனும் புள்ளியுடன் சங்கமத்தை நடத்திவிட்டன. அதாவது புவிமைய சந்திப்பு நடப்பதற்கு முன்னாலேயே சந்திர-சூரிய சந்திப்பு பூமியின் ஒரு பகுதியில் நடந்து விட்டது. சந்திரன் bஇலிருந்து cவரை நகரும் பாதையில் இவற்றிக்கு இடைப்பட்ட எல்லா பகுதிகளிலும் சங்கமத்தை நிகழ்திவிட்டுதான் புவிமைய சந்திப்பு நிகழும் c எனும் புள்ளிக்கு செல்கிறது.
c எனும் புள்ளியில் சங்கமத்தை நடத்திவிட்டு சந்திரன் நிறுத்தி விடுகிறதா. இல்லை. அது நகரும் பாதையில் a எனும் புள்ளி வரையுள்ள எல்லா இடங்களிலும் சங்கமத்தை நிகழ்திவிட்டுதான் செல்கிறது.
இப்போது நன்றாக விளங்கி இருப்பீர்கள். புவிமைய சந்திப்பு நிகழ்வதற்கு முன்னாலேயே சில பூமியின் இடங்களில் சந்திரன்  சூரியனுடன்  சங்கமித்து விட்டுதான் பூயின் மையத்துடன் சங்கமிக்கிறது. அதேபோல் பூமியின் மையத்துடன் சங்கமித்த பின்னும் பூமியின் பல இடங்களில் சூரியனுடன் சங்கமிக்கிறது.
ஒன்றை அதிகமாக தெரிந்து கொள்ளவேண்டியுள்ளது. மேலே படங்களில் a,b,c எனும் புள்ளிகளை நிலையாக இருப்பது போன்றும் சந்திரன் தனது வட்டப்பாதையில் சுற்றுவது போன்றும் காட்டியுள்ளோம். ஆனால் சந்திரன் தனது வட்டப்பாதையில் சுற்றுவதை விட வேகமாக பூமி தனது அச்சில் சுழல்கிறது. எனவே a,b,c புள்ளிகள் நகர்ந்த வண்ணமே உள்ளன. இப்படி நகர்வதால் பூமியின் அதிகப்படியான பகுதியில் சந்திரன் சூரியனுடன் சங்கமிக்கின்றது.
புவிமைய சந்திப்பு நிகழும் அந்த வேளையில் பூமியின் மற்றொரு பகுதி பழைய பிறையை நோக்கிக்கொண்டிருக்கும். அவர்களும் அதை அறிந்து கொள்ளலாம்.
மேலே கொடுத்த கிரகணங்களின் வீடியோ காட்சி கீழே. கஞ்ஜங்க்ஷன் எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று பாருங்கள். அது பூமியில் ஓரிடத்தில் மட்டும்தான் நடக்கிறதா என்று பாருங்கள். அது ஒரு வினாடி நிகழ்ச்சியா என்றும் பாருங்கள். அது தொடங்கி முடிய எத்தனை மணி நேரமாகிறது என்றும் பாருங்கள். கஞ்ஜங்க்ஷன் கஞ்ஜங்க்ஷன் என்று சொல்லி உங்களை இத்தனை நாள் முட்டாளாக்கியுள்ளனர்.
மார்ச் 8 2016 அன்று ஏற்படும் அமாவாசை
செப்டம்பர் 1 - 2016 அன்று ஏற்படும் அமாவாசை
சரி இப்படி படங்கள் போட்டு காட்டினால் போதுமா. இன்றுவரை நாங்கள் புவிமைய சங்கமத்தை பற்றிதானே கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன புதுக்கதை. இப்படி உண்மையாகவே விஞ்ஞானத்தில் இருக்கிறதா. இதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளர்களா? என்று வினவினால்
ஆம், இதற்கு பெயர் டோப்போ சென்ட்ரிக் கஞ்ஜங்க்ஷன் - புவிபரப்பு சந்திப்பு. இதுதான் உண்மையான சந்திப்பு உண்மையான அமாவாசை. புவிமைய சந்திப்பு - ஜியோ சென்ட்ரிக் கஞ்ஜங்க்ஷன் எனப்படுவது விஞ்ஞானிகள் தங்களது கணக்கிடுதலில் பயன் படுத்துவதாகும். அதுவும் அது போலரிசிரில் இருந்து பார்க்கப்படுவதாகும். பூமியில் நடப்பதும் பூமியில் இருந்து பார்க்கப்படுவதும் டோப்போ சென்ட்ரிக் கஞ்ஜங்க்ஷன் எனும் புவிபரப்பு சந்திப்பு தான். இதைதான் கணக்கில் எடுக்கவேண்டும். மேலே கிரகண காட்சிகளை காட்டியுள்ளோம். இவற்றை புவிமைய சந்திப்பு கணக்குகளை வைத்து செய்ய முடியாது. புவிபரப்பு சங்கம கணக்கை வைத்துதான் செய்ய முடியும். புவிமைய சந்திப்பு கணக்கு பழைமையான விஞ்ஞான முறை.  புவிமைய சந்திப்பு ஜியோ சென்ட்ரிக் கஞ்ஜங்ஷன் ஏட்டு சுரைக்காய் என்பது திண்ணம்.
மேலும் புவிமைய சந்திப்பு ஒரு விண்வெளி நிகழ்ச்சி என்பதால் அதை உலக நேரத்தில் குறிப்பிடுவது மரபு. அப்படி உலக நேரத்தில் குறிப்பிடுவது ஒவ்வொரு நாட்டினரும் அதை தங்கள் உள்ளூர் நேரத்தில் மாற்றி பயன்பெற வேண்டும் என்பதால் தான். உலக நேரத்தை உள்ளூர் நேரத்திற்கு மாற்றக்கூடாது என்று கமிட்டி கூறுவதிற்கு ஒரே காரணம் அவர்கள் காலண்டர் பொய்த்துபோக்கும் என்பது மட்டுமே. சரி அது ஒரு புறம் இருக்கட்டும். புவிப்பரப்பு சந்திப்புதான் உலகில் நடக்கும் நிகழ்ச்சி. அதுதான் உலகில் பிறை பிறப்பதை குறிப்பிடும் மிகச்சரியான, மிகத்துல்லியமான வானியல் பௌதீகம் என்று விளங்கி இருப்பீர்கள். அப்படிபட்ட புவிப்பரப்பு சங்கமத்தை உலக நேரத்தில் குறிப்பிட இயலாது. அது நடக்கும் உள்ளூர் நேரத்தில்தான் குறிப்பிடுவார்கள். இதன் மூலம் புவிப்பரப்பு சந்திப்புதான் துல்லியமான கணக்கீடு என்பதும் உலக நேரத்தை உள்ளூர் நேரமாக மாற்றக்கூடாது என்பது பொய்யான வாதமென்பதும் நிலை நிறுத்தப்படுகிறது.
புவிமைய சந்திப்பு - ஜியோ சென்ட்ரிக் கஞ்ஜங்க்ஷன்:
“பூமியின் மையப்புள்ளியும் சந்திரனின் மையப்புள்ளியும் சூரியனின் மையப்புள்ளியும் போலரிஸ் எனும் நட்சதிரத்திலிருந்து பார்க்கும்போது ஒரே நேர்கோட்டில் வருவதாகும்”
டோப்போ சென்ட்ரிக் கஞ்ஜங்க்ஷன் - புவிபரப்பு சந்திப்பு:
“பார்ப்பவரின் இடத்திலிருந்து சந்திரனின் மையப்புள்ளியும் சூரியனின் மையப்புள்ளியும் ஒரே நேர்கோட்டில் வருவதாகும்”
இவற்றின் ஆங்கில  வரையறைகளும் கணக்கீடுகளும் மேலே படங்களிலேயே கொடுத்துள்ளோம்.
1435 முதல் 1440 வரை நள்ளிரவு 12மணிக்கு அருகில் நடக்கும் புவிமைய சங்கம மாதங்கள். குறிப்புகளை வாசியுங்கள்.
1435
சந்திப்பு நிகழும் நேரம்
குறிப்பு
Ṣafar
Tue, 03-12-13, 00:22
இதற்கு 1:45 மணி நேரத்திற்கு முன்பே பூமியில் ஓரிடத்தில் சந்திப்பு நடந்துவிட்டதே அதை ஏன் நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை. அதனடிப்படியில் ஒரு நாள் முன்னாடியே மாதம் துவங்கப்படவேண்டுமே. இது நசீஉ எனும் குஃப்ர் இல்லையா
Rabī‘ II
Thu, 30-01-14, 21:38
இதற்கும் 1:45 மணிக்கு பின்புவரை பூமியில் அமாவாசை நீடிக்கிறதே  அதை ஏன் நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை. அதனடிப்படியில் ஒரு நாள் முன்னாடியே கும்ம தினத்தில் மாதத்தை துவங்கிவிட்டீர்களே. இது நசீஉ எனும் குஃப்ர் இல்லையா
Shawwāl
Sat, 26-07-14, 22:41
இதற்கும் 1:45 மணிக்கு பின்புவரை பூமியில் அமாவாசை நீடிக்கிறதே  அதை ஏன் நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை. அதனடிப்படியில் ஒரு நாள் முன்னாடியே கும்ம தினத்தில் மாதத்தை துவங்கிவிட்டீர்களே. இது நசீஉ எனும் குஃப்ர் இல்லையா
Rabī‘ I
Mon, 22-12-14, 01:35
இதற்கு 1:45 மணி நேரத்திற்கு முன்பே பூமியில் ஓரிடத்தில் சந்திப்பு நடந்துவிட்டதே அதை ஏன் நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை. அதனடிப்படியில் ஒரு நாள் முன்னாடியே மாதம் துவங்கப்படவேண்டுமே. இது நசீஉ எனும் குஃப்ர் இல்லையா
Jumādá I
Wed, 18-02-15, 23:46
இதற்கும் 1:45 மணிக்கு பின்புவரை பூமியில் அமாவாசை நீடிக்கிறதே  அதை ஏன் நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை. அதனடிப்படியில் ஒரு நாள் முன்னாடியே கும்ம தினத்தில் மாதத்தை துவங்கிவிட்டீர்களே. இது நசீஉ எனும் குஃப்ர் இல்லையா
Shawwāl
Thu, 16-07-15, 01:24
இதற்கு 1:45 மணி நேரத்திற்கு முன்பே பூமியில் ஓரிடத்தில் சந்திப்பு நடந்துவிட்டதே அதை ஏன் நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை. அதனடிப்படியில் ஒரு நாள் முன்னாடியே மாதம் துவங்கப்படவேண்டுமே. இது நசீஉ எனும் குஃப்ர் இல்லையா
1437


Muḥarram
Tue, 13-10-15, 00:05
இதற்கு 1:45 மணி நேரத்திற்கு முன்பே பூமியில் ஓரிடத்தில் சந்திப்பு நடந்துவிட்டதே அதை ஏன் நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை. அதனடிப்படியில் ஒரு நாள் முன்னாடியே மாதம் துவங்கப்படவேண்டுமே. இது நசீஉ எனும் குஃப்ர் இல்லையா
Rabī‘ II
Sun, 10-01-16, 01:31
இதற்கு 1:45 மணி நேரத்திற்கு முன்பே பூமியில் ஓரிடத்தில் சந்திப்பு நடந்துவிட்டதே அதை ஏன் நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை. அதனடிப்படியில் ஒரு நாள் முன்னாடியே மாதம் துவங்கப்படவேண்டுமே. இது நசீஉ எனும் குஃப்ர் இல்லையா
1438


Muḥarram
Sat, 01-10-16, 00:12
இதற்கு 1:45 மணி நேரத்திற்கு முன்பே பூமியில் ஓரிடத்தில் சந்திப்பு நடந்துவிட்டதே அதை ஏன் நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை. அதனடிப்படியில் ஒரு நாள் முன்னாடியே மாதம் துவங்கப்படவேண்டுமே. இது நசீஉ எனும் குஃப்ர் இல்லையா
Jumādá I
Sat, 28-Jan-17, 00:07
இதற்கு 1:45 மணி நேரத்திற்கு முன்பே பூமியில் ஓரிடத்தில் சந்திப்பு நடந்துவிட்டதே அதை ஏன் நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை. அதனடிப்படியில் ஒரு நாள் முன்னாடியே மாதம் துவங்கப்படவேண்டுமே. இது நசீஉ எனும் குஃப்ர் இல்லையா
Jumādá I
Sun, 06-Jan-19, 01:28
இதற்கு 1:45 மணி நேரத்திற்கு முன்பே பூமியில் ஓரிடத்தில் சந்திப்பு நடந்துவிட்டதே அதை ஏன் நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை. அதனடிப்படியில் ஒரு நாள் முன்னாடியே மாதம் துவங்கப்படவேண்டுமே. இது நசீஉ எனும் குஃப்ர் இல்லையா
Ramaḍān
Sat, 04-May-19, 22:45
இதற்கும் 1:45 மணிக்கு பின்புவரை பூமியில் அமாவாசை நீடிக்கிறதே  அதை ஏன் நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை. அதனடிப்படியில் ஒரு நாள் முன்னாடியே கும்ம தினத்தில் மாதத்தை துவங்கிவிட்டீர்களே. இது நசீஉ எனும் குஃப்ர் இல்லையா

புவிமைய சந்திப்பு உலகில் ஒரு புள்ளிக்கு மட்டும் நடப்பது. அது ஒரு வினாடி நிகழ்சி. எனினும் அதை ஒரு சர்வதேச நாளில் நடப்பதாக கொள்ளவேண்டும் என்பது கமிட்டி சகோதரர்களின் அறியாமை பிரச்சாரம் என்பது தெளிவாகிறது. அமாவாசை என்பது மூன்றரை மணிநேரம் வரை உலகின் பாதி பகுதிகளுக்கும் ஏற்படும் ஒரு நிகழ்வு ஆகும். இப்பொது கமிட்டியினர் அமாவாசை தொடங்கும் நேரத்தை எடுத்து காலண்டர் இடுவார்களா அல்லது அமாவாசை முடியும் நேரத்தை எடுத்து காலண்டர் இடுவார்களா?