Thursday 10 September 2015

எது சரியான கிப்லா?

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
ஹிஜ்ரி கமிட்டி என்போர் தட்டையான உலக வரைபடத்தில் கஅபாவிற்கு நேர்கோடு வரைந்து அந்த திசை தான் சரியான கிப்லா என்று வாதிட்டு வருகின்றனர். அதன் உண்மையை நிலையை பார்ப்போம்.




மேலே இருப்பது அவர்களின் இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இதுதான் சரியான கிப்லா எனவும் குறிப்பிட்டுள்ளனர்.  தட்டையான வரைபடத்தில் தான் இவர்கள் கிப்லா கோட்பாடு அமைந்துள்ளது என்பதை தெளிவாக இதிலிருந்து விளங்கிகொள்ளலாம். இவர்கள் சொல்வது சரிதானா என்று ஆய்வு செய்வதற்கு முன் தட்டையான வரைபடத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். உலகம் உருண்டையானது. உருண்டையான உலகத்தை தட்டையாக வரையவே இயலாது. ஒரு ஆரஞ்சு பழத்தில் தோலை உரித்து அதை தட்டையாக மாற்ற இயலுமா? இயலாது. அதே போல்தான் உலக வாரைபடமும். உருண்டையான உலகத்தை தட்டையாக தாளில் வரைய இயலாது. அவ்வாறெனில் இப்போது இருக்கும் வரைபடங்கள் எப்படி வரையப்பட்டன?  பார்ப்போம்.


ஒரு ஆரஞ்சு தோலை ஓரளவுக்கு கீழே இருப்பதுபோல் தட்டையாக மாற்றலாம் (கவனிக்க, செவ்வக வடிவில் மாற்றவே இயலாது). இதே  உருண்டையான பூமியையும் தட்டையாக வரைய முயற்சிப்போம்.




உருண்டையாக இருக்கும் வரைபடத்தை இதுபோல் வெட்டி தட்டையாக மாற்றலாம்.


அப்படி மாற்றப்பட்ட வரைபடம் இப்படி இருக்கும். கவனிக்க. நாடுகள் துண்டாடப்பட்டு இருக்கும். அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிவற்றை பார்க்க இயலாது.




இதுதான் உருண்டையாக இருக்கும் பூமியின் வரைபடத்தை தட்டையாக வரைய முற்பட்டால் ஏற்படும் பிரச்சனை. நாடுகளின் வடிவங்கள் அளவுகள் அவற்றிற்கிடையேயான தூரங்கள் மிகுதியாக சிதைக்கப்படும். இந்த பிரச்சனையை அறிஞர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து இதை எப்படி சரி செய்து பிழைகள் குறைந்த ஒரு வரைபடத்தை வரையலாம் என்று ஆய்வு செய்தனர். பல அறிவியலாளர்களும் பல முறைகளை கண்டு பிடித்தனர். அதில் சிலவற்றை பார்ப்போம்.


Sinusoidal Equal area projection: இது நாடுகளின் பரப்பளவு மட்டும் மாறாமல் வரையப்பட்ட வரைபடம். கவனிக்க. நாடுகளின் வடிவங்கள் சிதைந்துள்ளதை காணலாம். நாடுகளுக்கிடையேயான தூரமும் மாறியே இருக்கும். திசைகளும் நேராக இருக்காது


Goode Homolosine Equal area projection இதுவும் நாடுகளின் பரப்பளவு மட்டும் மாறாமல் வரையப்பட்ட வரைபடம். இதிலும் நாடுகளின் வடிவங்கள் சிதைந்துள்ளதை காணலாம். நாடுகளுக்கிடையேயான தூரமும் மாறியே இருக்கும். திசைகளும் நேராக இல்லை.  இது ஒரு துண்டிக்கப்பட்ட வரைபடம் என்பதும் விளங்கும். இது மேலே நாம் காட்டியதுபோல் ஆரஞ்சு பழத்தோலை உரித்தெடுத்தது போல் உள்ளதால். ஆரஞ்சுத்தோல் வரைபடம் Orange Peel Map என்றும் அழைக்கப்படுகிறது.


Equidistant Azimuthal Projection: இது நாடுகளுக்கிடையேயான தூரங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்ட வரைபடம். இந்த படம் எந்த புள்ளியை மையமாக வைத்து வரையப்பட்டதோ அந்த புள்ளியில் இருந்து மற்ற எல்லா இடங்களும் பூமியில் அவைகள் இருக்கும் உண்மையான தூர விகிதத்திலேயே இருக்கும். இதன் மூலம் இரண்டு இடங்களுக்கு இடையேயான திசையும் பாதுகாக்கப்படுகிறது. நாடுகளின் வடிவங்களும் பரப்பளவும் சிதைப்படுகிறது.


Conformal Projection: கடைசியாக நாடுகளின் வடிவங்கள் சிதைக்கபடாமல் வரையப்பட்ட வரைபடம் ↓. இதில் நாடுகளின் வடிவங்கள் சிதையாமல் இருக்கும். நாடுகளின் பரப்பளவு, அவற்றிற்கிடையேயான தூரம், திசைகள், ஆகியவை இதில் சிதைந்து விடும்.


உதாரணத்திற்கு 2,166,008 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட  கிரீன்லாந்து 7,692,264 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட  ஆஸ்திரேலியாவை விட மூன்று மடங்கு பெரிதாக இந்த வரைபடத்தில் தெரியும். உண்மையில் கிரீன்லாந்தை விட ஆஸ்திரேலியா மூன்றரை மடங்கு பெரியது. இதை கீழே  படத்தை பார்த்து நீங்கள் விளங்கிக்கொள்ளலாம்.
மேலும் அந்த வரை படத்தின் கீழ் பகுதியில் சிதைந்து கிடக்கும் அண்டார்க்டிகாவை பாருங்கள். அது என்னவென்றே தெரியாது. உண்மையில் அண்டார்க்டிகா இப்படி அழகாக இருக்கிறது.




இப்படிதான் உருண்டையாக இருக்கும் பூமியை தட்டையாக வரைந்தால் வடிவம், தூரம், பரப்பளவு, திசைகள் இவற்றில் ஏதாவது ஓன்று அல்லது இரண்டு மட்டுமே பாதுகாக்கப்படும். மற்றவை சிதைக்கப்படும். எனினும் தேவையை பொருத்து இந்த வரைபடங்கள் சேவையாற்றுகின்றன. உதா.Azimuthal வரைபடத்திலிருந்து திசைகளை கண்டு பிடிக்கலாம். வடிவங்கள் சிதையாமல் வரையப்பட்ட படம் மாலுமிகள் கப்பலை செலுத்த பெரிதும் பயன்பட்டது. அதை கண்டுபிடித்த மர்காட்டார் என்பவரின் பெயரில் அது பிரபலமானது. இந்த வரை படத்தில் வரையப்படும் நேர்கோடுகள் ரம்ப் கோடுகள் என்று அழைக்கப்பட்டன. இதன் சிறப்பு இந்த கோடு நெடுக்கைகளை ஒரே கோணத்தில் வெட்டிச்செல்லும். இதனால் காந்தமானியை ஒரே கோணத்தில் கொண்டு கப்பல் பயணத்தை செய்ய இயலும். அதற்கு முன்னிருந்த முறைகளை விட ரம் லைன் முறை கொஞ்சம் எளிமையானதாக இருந்ததால் ரம் கோடும் மர்காட்டார் வரைபடமும் கடல் பயணத்தில் பிரபலமானது.


தட்டையான வரைபடத்தில் வரையப்பட்ட இந்த ரம் கோடு வரைபடத்தில் மட்டுமே நேர்கோடாக இருக்கும். உண்மையில் அது பூமியில் சுருள் வடிவ கோடாகவே இருந்தது. ரம் லைன் மூலம் கடல் பயணம் செய்வது தூரத்தையும் அதிகரித்தது.
தட்டையான் மர்காட்டர்  வரைபடத்தில் வரையப்பட்ட நேர்கோடு உண்மையில் பூமில் சுருள் வடிவில் இருப்பதை காணலாம். இதே போல் பூமில் வரையப்பட்ட நேர்கோடு மர்காட்டார் வரைபடத்தில் வளைந்தே காணப்படும்.  மேலும் நீங்கள் மர்காட்டார் வரைபடத்தில் நேர்கோடு வரைந்து அதை கொண்டு ஒரு திசையை அறிய முயன்றால் அது தவறான திசையையே காட்டும்.




அதே படத்தில் நாம் ரம் லைன் கட்டும் திசையை குறித்துள்ளோம். ரம் லைன் மற்றும் நேர்கோடு ஆகிய இரண்டுமே Aஇலிருந்து B நோக்கி செல்லும் பாதைகள் தான். ஆனால் நேர்கோடு காட்டும் சரியான திசைக்கு சற்றும் பொருத்தமில்லாமல் ரம் லைன் திசை அமைந்துள்ளது.


வரைபடங்களை பற்றியும், தட்டையான மர்காட்டார் வரைபடத்தில் இருக்கும் பிழைகளை பற்றியும், ரம் லைன் பற்றியும், ரம் லைன் எவ்வாறு திசைகளை தவறாக காட்டுகிறது என்றும் தெரிந்து கொண்டோம். இனி கிப்லாவை பற்றி பார்ப்போம்.


கிப்லா என்பது முஸ்லிம்கள் தொழுகையில் முன்னோக்கும் திசை ஆகும். இது பெயர்குறிப்பிடப்பட்ட ஒரு திசை அல்ல. அதாவது கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எனும் பெயர்கொண்ட திசைகள் அல்ல. மாறாக உலகில் எங்கிருந்தாலும் கஅபா எனும் இறை இல்லத்தை முன்னோக்குவதாகும். இது கஅபா கண்ணுக்கு தெரியும் தூரத்தில் இருப்பவர்களுக்கு எளிது அதை நேரில்  பார்த்துவிடுவார்கள். அருகில் இருக்கும் ஊர்களுக்கும் எளிது பயண அறிவைக்கொண்டு கண்டு பிடித்து விடலாம். ஆனால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நாடுகளுக்கு அது எளிதல்ல. கிப்லாவை கண்டறிய நாம் இவ்வளவு சிரமப்பட காரணம் கஅபா நம் கண்களுக்கு தெரியாததுதான். கஅபா உலகத்தில் உள்ள எல்லோரின் கண்களுக்கும் தெரிவதாக வைத்துகொள்வோம் எல்லோரும் அதை நோக்கி எளிதாக கிப்லாவை அமைத்து கொள்ளலாம். கஅபாவை உலகத்தில் எல்லா பகுதியிலிருந்தும் பார்க்க இயலாது. ஆனால் கஅபாவின் மேல் வானை முட்டும் அளவிற்கு ஒரு கோபுரத்தை (மினார்) எழுப்பினால் அந்த கோபுரம் உலகின் எல்லா பகுதிக்கும் புலப்படும். அந்த கோபுரத்தை நோக்கி நம் கிப்லாவை அமைத்துகொள்ளலாம். அப்படி ஒரு கோபுரம் ஒரே ஒரு முறை அமைக்கப்பெற்றாலும் அதை நோக்கி நம் கிப்லாவை அமைத்து கொள்ளலாம். இதற்கு ஒரு வழிமுறையை அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான். வருடத்தில் இரண்டு முறை சூரியன் மிகச்சரியாக கஅபாவிற்கு மேலே வரும். அப்போது சூரியனை பார்ப்பது கஅபாவிற்கு மேலே எழுப்பப்பட்ட கோபுரத்தை பார்ப்பது போலாகும். சூரியன் மிகச்சரியாக மேலே இருப்பதால் கஅபாவின் நிழல் பூமில் விழாது. இது வருடத்திற்கு இரண்டு நாட்களுக்கு மட்டும் ஒரு நிமிடம் மட்டுமே நடக்கும் நிகழ்வாகும். முஸ்லிம்கள் வரலாற்றில் இந்த நாளை கிப்லாவை குறிப்பதற்காக பயன் படுத்தி வந்தனர். குறிப்பிட்ட அந்த நேரத்தில் சூரியன் இருக்கும் திசையை பார்ப்பது மிகச்சரியாக கிப்லாவை காட்டும். சூரியன் மிகச்சரியாக கஅபாவிற்கு மேல் இருக்கும்போது பூமில் இருக்கும் அனைத்து பொருட்களின் நிழலும் மிகச்சரியாக கிப்லாவை காட்டும். செந்துத்தாக நிறுத்தப்பட்ட ஒரு குச்சியின் நிழல் மிகச்சரியாக கிப்லாவை குறிக்கும். இதுவே கிப்லாவை குறிக்கும் மிகச்சரியான மிகமிகத்துல்லியமான முறையுமாகும்.


இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல. வருடா வருடமும் சாதாரணமாக செய்திதாள்களில் வரும் செய்தியாகும். பார்க்க http://www.arabnews.com/news/577106  & http://riyadhconnect.com/the-sun-directly-over-the-kaaba-in-makkah-today/


இன்று எல்லோருடைய மொபைல் போன்களிலும் கிப்லா காட்டும் வசதி வந்துவிட்டது அது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். எல்லா Android & iphone கிப்லா softwareகளும் அவற்றின்  GPS கருவியை பயன்படுத்தி அந்த இடத்தின் latitude  & longitude களை கண்டுபிடித்து ஒரு குறிப்பிட்ட formulaவை பயன்படுத்தி கிப்லா angleஐ கண்டுபிடிக்கின்றன. பின்னர் phoneஇல் உள்ள (magnetic compass) காந்தமானியை பயன்படுத்தி காந்த வடக்கை கண்டுபிடித்து அதனுடன் இந்த கோணத்தை கூட்டி கிப்லாவை காட்டுகின்றன. எல்லா போன்களில் இருக்கும் அந்த பிரபலமான பார்முலா இதுவே:




φ=latitude; λ=longitude; φk=latitude of Ka’aba; λ=longitude of Ka’aba; all in radians; resultant angle shows Qibla from north clockwise


இந்த பார்முலாவுக்கு Great Circle (shortest distance) பார்முலா என்று பெயர். உலகத்தில் இரண்டு புள்ளிகளுக்கு இடையேயான மிக குறைந்த தூரத்தை அடைவதற்கான திசையை காட்டும் பார்முலா. எளிதாக சொல்லவேண்டுமனில் மேலே படத்தில் நாம் காட்டிய A,B புள்ளிகளை இணைக்கும் நேர்கொட்டிர்கான பார்முலா இதுவே. A,B புள்ளிகளுக்கிடையேயான சரியான திசையை காட்டுவதற்கான கோடு நேர்கோடா அல்லது ரம் லைனா என்பதை அந்த படத்தை பார்த்தாலே தெரிந்து விடும் எனினும் எது சரியான திசையை காட்டுகிறது என்று நாம் சோதித்து பார்த்தே தெரிந்து கொள்வோம்.


ரம் லைன் திசையை கண்டுபிடிக்கும் பார்முலா:
கிப்லாவை மிகத்துல்லியமாக கண்டுபிடிக்கும் முறையை நாம் ஏற்கனவே தெரிந்து கொண்டோம். பின்வரும் நேரங்களில் மிகச்சரியாக காபாவிற்கு மேல் சூரியன் வரும். அந்த நேரத்தில் சூரியன் வடக்கிலிருந்து எத்தனை டிகிரி விலகி உள்ளது என்பதை ஒரு எளிய கணக்கிலிருந்து கண்டு பிடித்து விடலாம். அந்த நேரத்தில் சூரியனின் azimuth கோணம் மேலுள்ள பார்முலாக்களில் எதனுடன் போருந்திபோகிறதோ அதுவே சரியான கிப்லா பார்முலா.
Year
Qibla Day
(9:18 UTC)
Qibla Day
(9:27 UTC)
2015
28 May
16 July
2016
27 May
15 July
2017
27 May
15 July
2018
28 May
15 July
2019
28 May
16 July
2020
27 May
15 July


இந்த நாட்களில் சூரியன் கஅபாவிற்கு மேல் வருவது உண்மைதானா என்பதற்கு ஏற்கனவே செய்தித்தாள்களை ஆதாரமாக காட்டியுள்ளோம். அதற்கான விஞ்ஞான ஆதாரம் இதோ. சூரியன் மிகச்சரியாக உச்சத்தில் இருந்தால் அப்போது azimuth 180 டிகிரி அல்லது  0 டிகிரியாகவும் altitude/elevation 90 டிகிரியாகவும் இருக்கும். கீழே குறிப்பிட்ட நேரத்தில். சூரியன் மிகசரியாக உச்சத்தில் இருப்பதற்கு கீழே வலது மூலையில் காட்டப்பட்டிருக்கும் Az/El (azimuth, elevation) சாட்சியாகும்.




சூரியன் குறிப்பிட்ட நேரத்தில் எந்த திசையில் இருக்கும் என்பதை கண்டுபிடிக்க பின்வரும் வரும் இணையதளங்களில் உள்ள வழிமுறைகளை Algorithms பயன்படுத்தியுள்ளேன். இவை விக்கிபீடியா போன்று யார் வேண்டுமானாலும் எடிட் செய்ய இயன்ற இணைய தளங்களல்ல. விண்ணியல் ஆராய்சிக்கூடங்களாலும் விண்ணியல் நிபுணர்களாலும் நடத்தப்படும் இணைய தளங்கள்
aa.usno.navy.mil/faq/docs/SunApprox.php


மேலே குறிப்பிட்ட GREAT CIRCLE & RHUMB LINE பார்முலாக்களை அல்லாஹ் சூரியன் மூலம் ஏற்படுத்தி தந்த கிப்லா அறியும் வழிமுறையுடன் ஒப்பிட்டு கீழே அட்டவணையாக தந்துள்ளேன். (மேலுள்ள நான் இட்ட அந்த excel file தேவைப்படுபவர்கள் என்னிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம். இந்த algorithmகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் அதில் படிப்படியாக விவரித்துள்ளேன். அந்த excelஐ அப்படியே கீழே காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்) அல்லாஹ் ஏற்படுத்திய சூரியனை அடிப்படையாக கொண்ட கிப்லா நிர்ணய முறையும் அதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட GREAT CIRCLE பார்முலாவும் மிகச்சரியாக போருந்திப்போவதைப்பாருங்கள். அதே வேளையில் தட்டையான வரைபடத்தில் வரையப்பட்ட ரம் லைன் முறை எப்படி தவறாக இருக்கிறதென்பதையும் கவனியுங்கள். இப்போது ஒரு உண்மையை சொல்லியாகவேண்டும். அல்லாஹ் நமக்கு எளிமையாக்கி தந்த சூரியனை கொண்டு கிப்லா அமைக்கும் முறையை கணிதமாக மாற்றிய போது கிடைக்கபெற்றதுதான் great circle method. இன்று மொத்த உலகமும் இதனை ஏற்றுக்கொண்டு இதனடிப்படையில்தான் கிப்லாவை அமைத்து வருகிறது.


Azimuth of Sun
சூரியன் இருக்கும் திசையின் கோணம்
Qibla Angle Great Circle method
சூரிய கணக்கீட்டின்படி கிப்லா கோணம்
Qibla Angle Rhumb Line method
தட்டையான வரைபடத்தின்படி கிப்லா கோணம்
Difference
இரண்டு கிப்லா முறைகளின் வித்தியாசம்


Place
நாகர் கோயில்
திருச்சி
காயல் பட்டினம்
லட்சத் தீவு
ஏறுவாடி
கொழும்பு
கோழிக் கோடு
Myanmar
Taiwan
Japan
Mauritania
Paris
South Africa
Date
16-07-15
16-07-15
16-07-15
16-07-15
16-07-15
16-07-15
16-07-15
16-07-15
16-07-15
16-07-15
16-07-15
16-07-15
16-07-15
Longitude (Lng)
77.43
78.685
78.12
72.63
77.604
79.842
75.77
96
120.8
139.7667
-16.5
2.3508
0.1275
Lat (Lat)
8.17
10.805
8.57
10.57
8.4458
6.9344
11.25
21.42251
21.9
35.6833
21.42251
48.856
51.507
Time to calculate sun shadow
9:27
9:27
9:27
9:27
9:27
9:27
9:27
9:27
9:27
9:27
9:27
9:27
9:27
days since 01-01-2000 12PM
5,674.50
5,674.50
5,674.50
5,674.50
5,674.50
5,674.50
5,674.50
5,674.50
5,674.50
5,674.50
5,674.50
5,674.50
5,674.50
mean anomaly of sun
190.32°
190.32°
190.32°
190.32°
190.32°
190.32°
190.32°
190.32°
190.32°
190.32°
190.32°
190.32°
190.32°
mean longitude of sun
113.51°
113.51°
113.51°
113.51°
113.51°
113.51°
113.51°
113.51°
113.51°
113.51°
113.51°
113.51°
113.51°
ecliptic longitude of the Sun
113.18°
113.18°
113.18°
113.18°
113.18°
113.18°
113.18°
113.18°
113.18°
113.18°
113.18°
113.18°
113.18°
The distance of the Sun from the Earth
1.02 AU
1.02 AU
1.02 AU
1.02 AU
1.02 AU
1.02 AU
1.02 AU
1.02 AU
1.02 AU
1.02 AU
1.02 AU
1.02 AU
1.02 AU
mean obliquity of the ecliptic
23.44°
23.44°
23.44°
23.44°
23.44°
23.44°
23.44°
23.44°
23.44°
23.44°
23.44°
23.44°
23.44°
right ascension  of sun
115.02°
115.02°
115.02°
115.02°
115.02°
115.02°
115.02°
115.02°
115.02°
115.02°
115.02°
115.02°
115.02°
declination of the Sun
21.45°
21.45°
21.45°
21.45°
21.45°
21.45°
21.45°
21.45°
21.45°
21.45°
21.45°
21.45°
21.45°
equation of time
-0.10
-0.10
-0.10
-0.10
-0.10
-0.10
-0.10
-0.10
-0.10
-0.10
-0.10
-0.10
-0.10
Universal Time, Hrs
9.45
9.45
9.45
9.45
9.45
9.45
9.45
9.45
9.45
9.45
9.45
9.45
9.45
local sidereal time
152.69°
153.95°
153.38°
147.89°
152.87°
155.11°
151.03°
171.26°
196.06°
215.03°
58.76°
77.61°
75.39°
Hour Angle
37.68°
38.93°
38.37°
32.88°
37.85°
40.09°
36.02°
56.25°
81.05°
100.01°
303.75°
322.60°
320.37°
Altitude of Sun
51.37°
51.24°
50.90°
56.67°
51.32°
48.68°
54.07°
37.95°
15.71°
4.69°
37.94°
49.63°
47.09°
-
65.67°
69.09°
66.37°
66.85°
66.05°
65.20°
68.85°
78.92°
72.77°
66.88°
78.92°
119.22°
119.33°
Azimuth of Sun
294°
291°
294°
293°
294°
295°
291°
281°
287°
293°
79°
119°
119°
Qibla Angle Great Circle method
294°
291°
294°
293°
294°
295°
291°
281°
287°
293°
79°
119°
119°
Qibla Angle Rhumb Line method
290°
286°
289°
289°
290°
291°
286°
270°
270°
261°
90°
132°
134°
Difference
-4°
-5°
-4°
-4°
-4°
-4°
-5°
-11°
-18°
-32°
11°
13°
15°


மேலே இருப்பது கஅபா இருக்கும் பூமியின் அரைக்கோளத்திற்கா கணக்கு மட்டும் தான் தென் அரைக்கோளத்திற்கும் சேர்த்து போட்ட கணக்கு இதோ
Place
lat
long
Proven Correct Qibla Based on ZERO SHADOW day on Ka'ba
Proven Wrong Qibla Based on Flat Map Projection (Rhumb Line method)
Difference in clockwise direction
நாகர்கோயில்
8.17°
77.43°
294°
290°
-4.2°
திருச்சி
10.81°
78.69°
291°
286°
-5.0°
காயல்பட்டினம்
8.57°
78.12°
294°
289°
-4.4°
லட்சத்தீவு
10.57°
72.63°
293°
289°
-4.1°
ஏறுவாடி
8.45°
77.60°
294°
290°
-4.3°
கொழும்பு
6.93°
79.84°
295°
291°
-4.3°
கோழிக்கோடு
11.25°
75.77°
291°
286°
-4.7°
New York
40.71°
-74.01°
58°
101°
43°
Chicago
41.84°
-87.68°
49°
101°
52°
Toronto
43.70°
-79.40°
55°
103°
48°
Yukon
64.00°
-140.17°
109°
109°
New Zealand
-42.00°
174.00°
256°
297°
41°
Tonga
-21.13°
175.20°
279°
288°
9.0°
Kiribati
1.47°
173.03°
299°
279°
-21°
Hawaii
21.31°
-157.79°
337°
90°
-247°
Alaska
64.00°
-150.00°
351°
108°
-243°
Ontario
50.00°
-85.00°
50°
106°
56°
Vancouver
49.28°
-123.12°
17°
102°
85°
los Angeles
34.00°
-118.25°
24°
95°
71°
Dakota
43.90°
-91.30°
46°
102°
56°
Houston
29.76°
95.36°
274°
261°
-14°
Mexico
21.42°
-102.00°
43°
90°
47°
Samoa
-13.83°
-171.75°
289°
80°
-208°
Fiji
-18.00°
179.00°
282°
286°
Myanmar (Burma)
21.4225
96.00°
281°
270°
-11°
Taiwan
21.90°
120.80°
287°
270°
-18°
Japan
35.68°
139.77°
293°
261°
-32°
Mauritania
21.4225
-16.50°
79°
90°
11°


சரியான கிப்லாவிற்கும் தவறான ரம் லைன் கிப்லாவிற்கும் உள்ள வித்தியாசத்தையும் கணக்கிட்டு காட்டியுள்ளோம். கனடாவின் யூகோன் பகுதிக்கான கிப்லா இறைவனின் கணக்குப்படி மிகச்சரியாக வடக்கி நோக்கி உள்ளது. அது ரம் லைன் கணக்குப்படி 109 டிகிரி வித்தியாசம் கொண்டுள்ள்ளது. ஹவாய் மெக்சிகோ மற்றும் மொரிற்றேனியாவிற்கு ரம் கிப்லா மிகச்சரியாக கிழக்கு நோக்கியும் அல்லாஹ்வின் கணக்குப்படி பல டிகிரி வித்தியாசத்துடனும் உள்ளது. 11 மற்றும் 18 டிகிரி மட்டுமே சாய்திருக்கும் பர்மா மற்றும் தைவானின் கிப்லாக்களை ரம் லைன் முறை தவறாக மேற்கு நோக்கி காட்டுகிறது.


தட்டையான வரைபடத்தில் (ரம் லைன் பார்முலாவை பயன்படுத்தி) கிப்லாவை அமைத்தால் அது எவ்வளவு பெரிய பிழையில் சென்று சேர்க்கும் என நன்றாக விளங்கி இருப்பீர்கள். வளைந்திருக்கும் பூமியை தட்டையாக வரைந்ததால் தட்டையான வரைபடத்தில் வரையப்படும் நேர்கோடுகள் பூமியில் வளைந்திருக்கும். அதே போல் உலக உருண்டையில் வரையப்படும் நேர்கோடுகள் தட்டையான வரைபடத்தில் வளைந்திருக்கும். சகோதரர்கள் மேலே படத்தில் வரைந்திருக்கும் நேர்கோடுகள் உண்மையில் பூமியில் வளைந்திருக்கும். எப்படி  A மற்றும் Bக்கு இடையே வரைந்த ரம் லைன் சரியான திசையை காட்டதோ அதே போன்று தட்டையான வரைபடத்தில் வரைந்த நேர்கோடுகள் கிப்லாவை காட்டாது.


இது தட்டையான வரைபடத்தில் கிப்லாவை காட்டும் படம். உருண்டையான பூமில் வரையப்படும் நேர்கோடுகள் தட்டையான வரைபடத்தில் வளைந்துதான் இருக்கும். கிப்லா மாறும் புள்ளி ஓன்று தான். பூமியின் வரைபடத்தை விரித்து வைக்கப்பதால் அது அதன் இரண்டு ஓரங்களிலும் இரண்டு பாதியாக தெரியும்.


இனிமேல் சகோதரர்களின் வாதங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்


இந்த படத்தில் great circle முறையை பயன்படுத்தி கிப்லாவை கணக்கிட்டு அதை உலக வரைபடத்தில் காட்டும் ஒரு இணையதள சேவையை சகோ விமர்சித்துள்ளனர். “Qiblafinder.com சரியான கிப்லாவை காட்டுறது என்றாலும் அது கிப்லா மாற்றத்தை நிலப்பரப்பில் காட்டுகிறது அது கடலில்தான் அமையவேண்டும். நிலப்பரப்பில் அமைந்தால் அடுத்தடுத்து இருக்கும் பள்ளிகளில் எதிர் திசைகளில் கிப்லா அமைந்து விடும். எனவே கடலில் கிப்லா மாற்றம் கடலில்தான் அமைய வேண்டும். அது ஏற்கனவே கிழமை மாற்றம் நடக்கும் சர்வதேச தேதிகோட்டில் நடந்தால் நல்லது” என்பது சகோதரரின் வாதம். இது சகோதரர்களின் அறியாமையை காட்டுகிறது. அல்லாஹ் இயற்கையாக வடிவமைத்து தந்த Great circle முறையில் கிப்லாவை அமைத்தால் அது நிலப்பரப்பில் எந்த பகுதியிலும் எதிர் திசைகள் கொண்ட பள்ளிகளை அமைக்காது. சகோதர்களின் தவறான புரிதலாகும். கிழமை மாற்றைதையும் கிப்லாவையும் சகோதரர்கள் குழப்பிகொண்டனர்.




சகோ வைக்கும் இரண்டாம் வாதம். கிரேட் சர்கிள் முறையை பற்றி சகோதரர் இவ்வாறு எழுதுகிறார் “இது உலக உருண்டையில்  நூலை வைத்து கஅபாவிற்க்கான மிக குறைந்த தூரத்தை கண்டுபிடிக்கும் முறையாகும். இது வட அமெரிக்காவில் ஒரு சிறு தொகையினரால் பின்பற்றப்படும் முறையாகும். இந்த முறையில் சரி செய்ய இயலாத சில பெரிய பிழைகளை நான் காண்கிறேன். மேலும் இது இஸ்லாதிற்கு எதிராகவும், ஒற்றுமைக்கு எதிராகவும், தொழுகையில் வரிசையாக நிற்கும் முறைக்கு எதிராகவும் அமைந்துள்ளது. Shortest distance (Great circle) முறையை பயன்படுத்தினால் கஅபாவிற்கு எதிர் முனையில் இருக்கும் புள்ளியிலிருந்து எங்கு நோக்கினாலும் அது காபாவிற்கு குறைந்த தூரத்தையே காட்டும். முடிவில் அந்த புள்ளியை சுற்றி நின்று தொழுபவர்கள் முதுகுகளை காட்டிக்கொண்டு வட்டவடிவில் நின்று தொழ வேண்டி வரும். மேலும் அந்த பகுதியை மட்டும் நாம் எடுதுபார்த்தல் தொழுகையில் நான் கடைபிடிக்கும் எந்த ஒழுங்கையும் அங்கே செய்ய இயலாது. இமாம் தொழுகையில் வரிசைகளுக்கு முன் நிற்க வேண்டும். இப்படி முதுகை காட்டிக்கொண்டு நின்றால் இமாம் எங்கே நிற்பார். இந்த முறையினால் அந்த ஒரு பகுதிக்கு மட்டுமல்ல உலகின் ஒரு பாதியில் தொழுகையே நடத்த இயலாமல் போய்விடும். எனவே இது குரானுக்கும் சுன்னாவுக்கும் எதிரானது மட்டுமல்ல இது நம்மை ஜாஹிலியாவுக்கு இழுத்துச்செல்லும்.”


சகோதரரின் முதல் வாதம் இது வட அமெரிக்காவில் ஒரு சிறு தொகையினரால் பின்பற்றப்படும் முறை என்பதாகும். இது சகோதரரின் அறியாமையையே காட்டுகிறது. தட்டையான வரைபடத்தில் கிப்லாவை குறிக்கும் ரம் லைன் முறைதான் வட அமெரிக்காவில் ஒரு சிறு தொகையினரால் மட்டுமே உண்மையென்று நம்பப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து பள்ளிகளும் இந்த பார்முலாவை பயன்படுத்திதான் கட்டப்படுகின்றன (பழைய பள்ளிவாசல்களின் கிப்லா ஒரு வேளை தவறாக அமைக்கப்பட்டிருக்கலாம்) மேலும் சூரியனை பார்த்து கிப்லாவை அமைப்பதும் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட great circle (shortest distance) முறையும் இன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டதல்ல இமாம்கள் காலத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டுவிட்டன. சகோதரர்கள் அறியாமல் இருக்கிறார்கள். இரண்டாவது வாதம் இப்படி கிரேட் சர்கிள் Shortest distance (Great circle) முறையை பயன்படுத்தினால் கஅபாவிற்கு எதிர் முனையில் இருக்கும் புள்ளியிலிருந்து எங்கு நோக்கினாலும் அது காபாவிற்கு குறைந்த தூரத்தையே காட்டும். முடிவில் அந்த புள்ளியை சுற்றி நின்று தொழுபவர்கள் முதுகுகளை காட்டிக்கொண்டு வட்டவடிவில் நின்று தொழ வேண்டி வரும். இதுவும் சகோதரரின் அறியாமையை காட்டுகிறது. நாம் கூறும் கஅபாவின் மறு முனை கடல் பகுதியில் அமைந்துள்ளது. அதை சுற்றி ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு மனிதர் வசிக்கும் எந்த நிலப்பரப்பும் இல்லை. இப்படி மக்கள் குழம்பிக்கொள்வார்கள் அதனால்தான் 1000கிலோமீட்டர் சுற்றளவிற்கு அந்த இடத்தை அல்லாஹ் கடலாக்கிவிட்டானோ. அப்படியே வீம்புக்கு அந்த இடத்தில் ஒரு கப்பலை நிறுத்தினாலோ செயற்கையாக ஒரு தீவை உருவாகினால் கூட இஸ்லாம் அதற்கு தீர்வு வழங்காமல் இல்லை. கஅபாவை சுற்றி நாம் வட்ட வடிவில் நின்று தான் தொழுகிறோம். சகோ கூறுவது போல் நேர் வரிசையாக நின்று தொழவில்லை. ஆனால் கஅபாவிற்கு உள்ளே தொழுபவர்கள் இமாமை நடுவில் நிறுத்திவிட்டு வட்ட வடிவில் நின்று தொழுவார்களா? இல்லை. ரசூலல்லாஹ் கஅபாவிற்கு உள்ளே நின்று தொழும்போது கஅபாவின் வாசலின் எதிரில் உள்ள சுவற்றை நோக்கி தொழுதார்கள் என்று ஹதீஸில் தெளிவாக உள்ளது. அதே போல் மிகச்சரியாக கஅபாவின் எதிர்முனையில் நின்று தொழுபவர்கள் ரசூலுல்லாஹ் கஅபாவிற்குள் நோக்கிய அந்த சுவற்றை நோக்கி தொழுதால் போதுமானது. இதற்கான ஹதீஸ் ஆதாரம் கீழே


وَكَانَ الْبَيْتُ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ سَطْرَيْنِ، صَلَّى بَيْنَ الْعَمُودَيْنِ مِنَ السَّطْرِ الْمُقَدَّمِ، وَجَعَلَ باب الْبَيْتِ خَلْفَ ظَهْرِهِ، وَاسْتَقْبَلَ بِوَجْهِهِ الَّذِي يَسْتَقْبِلُكَ حِينَ تَلِجُ الْبَيْتَ بَيْنَهُ وَبَيْنَ الْجِدَارِ، قَالَ وَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى وَعِنْدَ الْمَكَانِ الَّذِي صَلَّى فِيهِ مَرْمَرَةٌ حَمْرَاءُ‏ புகாரி 4400


நமது வரிசை வட்டமாக இல்லை நேர் கோட்டு வரிசையாகவே உள்ளது. எனவே வட்டமாக விரிந்து செல்லும் கிப்லா தவறானது எனவும். தட்டையாக இருக்கும் வரைபடத்தில் அவர்கள் காட்டுவது போன்றுதான் கிப்லா இருக்கும் எனவும் சகோதரர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஒரு பெரிய வட்டத்தின் சிறிய பகுதி நேர்கோடாக தோராயப்படுதப்படும் என்பது கணிதம். கஅபாவை சுற்றிலும் வட்டமாக நின்று தொழும் முஸ்லிம்கள் மாக்காவிலேயே இருக்கும் வேறு பள்ளிகளில் வட்டமாக நின்று தொழமாட்டர்கள். இதற்க்கு காரணம் அந்த பகுதியில் வட்டம் மிகவும் பெரிதாகிவிடும். அந்த பெரிய வட்டத்தில் ஒரு சிறு பகுதியிலேயே மக்கள் நின்று தொழுவார்கள். அங்கே நாம் ஒரு சிறிய வளைவுள்ள ஆர வடிவிலான வரிசையை ஏற்படுத்தினாலும் அது ஒரு நேர்கோடாகவே இருக்கும். உலகில் மக்கள் தொழும் அனைத்து நேர் வரிசைகளையும் இணைத்துப் பார்த்தல் அது ஒரு வட்டத்தையே ஏற்படுத்தும். மேலும் சகோதரர் சொல்வது போன்று காபாவின் எதிர் முனை இருக்கும் அந்த மொத்த அரைகோளதிற்கும் இந்த பிரச்னை வரும் என்பது சகோதரரின் அறியாமை. அந்த இடத்திலிருந்து ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு கடல் தான். அதன் அருகாமையில் இருக்கும் தீவில் அந்த வட்டம் ஒரு நேர்கோடாக மாறிவிடுகிறது. எந்த பிரச்னையும் அங்கு இல்லை.