Friday 4 March 2016

கிப்லா மாற்றம் யூத சதியா?

கிப்லா மாற்றம் யூத சதியா?
புகாரி 33. 'நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
புகாரி 34. 'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 
9:73 நபியே! மறுப்போருடனும்நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக! அவர்களிடம் கடினமாக நடப்பீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம்.
இக்கட்டுரையை இறுதிவரை வாசிக்கும்போது மேலே அல்லாஹ்வும் தூதரும் முனாஃபிக்குகளின் அடையாளமாக் சொன்ன பண்புகள் ஹிஜ்ரி கமிட்டி அறிஞர்களிடம் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

பூமியின் மையப்பகுதி மக்கா நகரமா? சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா?

மேற்படி தலைப்பு கொண்ட ஒரு கட்டுரையை மேற்படி ஹிஜ்ரா கமிட்டி வெளியிட்டுள்ளது. இதை எழுதிய மேற்படியாரைப்பற்றியும் அந்த கட்டுரையின் உண்மைத்தன்மைப் பற்றியும் பார்க்கும் முன் இந்த கட்டுரையின் பின்னணியை தெரிந்து கொள்ளவேண்டும்.
நாம் peaceful islam எனும் telegram குழுமத்தில் ஹிஜ்ரா காலண்டர் ஆதரவாளர்களுடன் விவாதித்து வருகிறோம். இதில் ஹிஜ்ராவினர் ஒருபுறம், தத்தம் பகுதி பிறையை பின்பற்றுவோர் மறுபுறம். ஆனால் இரண்டுக்கும் மத்தியில் சந்திரக் கணக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் ஹிஜ்ராக் கமிட்டி வெளியிட்ட ஹிஜ்ராக் காலண்டர் பிழையானது என்ற நிலைபாட்டில் இருக்கும் ஒரு சகோதரரும் இருக்கிறார். “பிறையின் படித்தரங்களும் ஹிஜ்ராக் காலண்டரும் ஒத்துப்போகும்” என்பது கமிட்டிக் கொள்கை. இவர்களின் இந்த படித்தரத் கொள்கைத் தவறு என்பதை அந்த சகோதரர் நிரூபித்தார். ஹிஜ்ராக் காலண்டரில் பிறையில் ஒரு படித்தரம் காணாமல் போனதையும் அவர் வெளிக்காட்டினார். இதை உணர்ந்தும் இவர்களின் காலண்டர் மனித ஏற்பாடான UTCயை மட்டுமே அடிப்படையாக கொண்டது என்பதை உணர்ந்தும் மற்றொரு சகோதரர் ஹிஜ்ரி கமிட்டி கொள்கையில் இருந்து வெளியேறினார். வெளியேறிய அந்த சகோதரர் ஹிஜ்ரா கமிட்டிக் கொள்கைகளை ஆணித்தரமாக பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியேறிய அவர் ஹிஜ்ராக் காலண்டரில் இருக்கும் பிழைகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். இதனால் கோபமுற்ற ஹிஜ்ராக் கமிட்டி இந்த இரண்டு சகோதரர்களை மோசமாகச் சாடியதுடன் அவர்களை மிகக்கடுமையாக விமர்சித்துக் கட்டுரையையும் வெளியிட்டனர். அந்த இரண்டு சகோதரர்களும் எல்லா கணக்கீட்டர்களைப் போல ததஜவை வெறுப்பவர்கள் (அல்லது விரும்பாதவர்கள்). அவர்களுக்கும் ததஜவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிந்துகொண்டே “அவர்களைப் பின்னிற்று இயக்குவது ததஜ” என்று பொய்(1)யுரைத்து அவதூறு (நேர்மையின்மை 1) நிரப்பிக் கட்டுரையொன்றை வடித்தனர். நாமும் அவற்றிற்கு தக்க விடையைக் கொடுத்தோம் அவர்களின் கட்டுரையையும் நமது மறுப்பையும் இங்கே காண்க. http://hafsa13.blogspot.com/2015/09/22.html
இதன் தொடர்ச்சியாக அந்த சகோதரர் வெளிப்படுத்திய “காணாமல் போன பிறை”யின் சங்கதியாலும் நாம் தொடர்ந்து வெளிப்படுத்தும் “திசை தொழும் துலுக்கர்” “கமிட்டியின் கிப்லா க்ரெனிச்” போன்ற உண்மைகளாலும் மிகுந்த நெருக்கடிக்குள்ளான கமிட்டியினர் மீண்டும் ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளுடன் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளனர். அந்தக் கட்டுரையின் உண்மைத் தன்மையை இங்கே வெளிப்படுத்துகிறோம்.
அவர்களின் கட்டுரையில் மூன்று தரப்பினர்களை பற்றி குறிப்பிட்டிருப்பர்.
முதல் வகை: என்பது நம்மைக் குறிப்பிடுவதாம்.
இரண்டாம் வகை: இவர்களின் காலண்டரில் காணாமல் போன அந்த பிறையைக் கண்டுபிடித்தவரைக் குறிப்பிடுவதாம்
மூன்றாம் வகை: இது கமிட்டியில் இருந்து வெளியேறிய நபருக்கு அல்லது http://ummal-qura.net/ எனும் இணைய தளத்தை நடத்துபவருக்கு.
இதில் நான் வைத்த வாதத்திற்கு இவர்கள் பொய்யாக அவதூறு கூறி பதில் அளித்திருப்பதற்கு மட்டுமே நான் மறுப்பு வெளியிடுகிறேன். மற்ற இருதரப்பு வாதமும் நமது வாதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நாம் கஅபாவை முதன்மை நெடுக்கை என்று சொன்னதற்கும் அதன் எதிர்முனையை தேதிகோடு என்று சொன்னதற்கும் இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்கின்றன. நிச்சயமாக இவர் புழுகுவதுபோல் கஅபாவின் புனிதத்தை வைத்து நாம் சொல்லவேயில்லை. நமது கட்டுரையை இங்கே காண்க http://hafsa13.blogspot.com/2015/03/committeedateline.html
நாம் கூறும் காரணங்கள்
காரணம்-1: புவியியல் அடிப்படியில் ஒரு நாளைத் துவங்க மிகச்சரியான இடம் கஅபாவின் எதிர்முனை. இதை செயற்கைக்கோள் படங்களுடன் நிறுவியிருந்தோம். காண்க http://hafsa13.blogspot.com/2015/03/committeedateline.html
காரணம்-2: தற்போது இருக்கும் தவறான தேதிக்கோட்டால் மிக அருகாமையில் இருக்கும் இரு ஊர்களில் ஒரு ஊரில் ஜுமுஆவும் அடுத்த ஊரில் லுஹ்ர் தொழுகையும் நடைபெறுகிறது. நாகர்கோவிலுக்கும் திருவனந்தபுரத்திற்கும் இடையே இரண்டு தேதிகளா என கொக்கரிக்கும் இவர்கள். இந்த இரு நகரங்களை விட அருகாமையில் இருக்கும் வெஸ்டன் சமோவாவும் அமெரிக்கன் சமோவாவும் ஒரே நேரத்தில் சூரியன் வானின் உச்சத்தில் இருப்பதை பார்த்துக்கொண்டே ஒருவர் ஜுமுஆவும் மற்றவர் லுஹ்ரும் தொழுவது அல்லாஹ்வின் அத்தாட்சி என்கின்றனர். இது அத்தாட்சியா அவல நிலையா? ஒரே நேரத்தில் தூத்துக்குடியில் லுஹ்ரும் காயல்பட்டினத்தில் ஜுமுஆவும் தொழுதால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இதே போன்று மிக அருகாமையில் (வெறும் 5௦கிமி தூரத்தில்) இருக்கும் இரு நாடுகளில் ஒன்றில் ஜுமுஆவும் அதே வேளையில் மற்றொன்றில் லுஹ்ரும் தொழுவதுதான் அல்லாஹ்வின் அத்தாட்சியா. நிச்சயமாக இருக்காது. இதற்கு ஒரே தீர்வு தேதிக்கோட்டை மாற்றுவது.
இப்போது இருக்கும் தேதிக்கோட்டை ஒரு பெரிய ரப்பரை எடுத்துச் சென்று அழித்துவிட்டு புதிய தேதிக்கோட்டை பெரிய பென்சிலைக் கொண்டு கஅபாவின் மறு முனையில் நாம் வரையச்சொல்லவில்லை. அல்லது இவர் சொல்வது போல் 40டிகிரி பரப்பளவு கொண்ட, 2.30 மணி நேர வித்தியாசம் கொண்ட நிலப்பரப்பை அலேக்காக தூக்கிச்சென்று இடம் மாற்றச் சொல்லவும் இல்லை. ஜுமுஆ நாளின் ஜுமுஆ நடக்கும் அதேவேளையில் தேதிக்கோட்டுப்பகுதி மக்கள் தவறாக லுஹ்ர் தொழக்கூடாது என்கிறோம்.
இவை இரண்டு மட்டுமே தேதிக்கோடு பற்றிய நமது பார்வை
இனி மேற்படியாரின் கட்டயுரையைப் பார்ப்போம்.
. பொய்(2)
நீங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை என்று சொல்லி முடித்துக்கொள்ளுங்கள். யாருமே ஆய்வு செய்யவில்லை என்று நீங்கள் சொல்லவேண்டாம். நமது ஆய்வை இங்கே காண்க http://hafsa13.blogspot.com/2015/04/PrayerTimes.html
இதற்கு நாமும் தனியாக பதிலளித்துள்ளோம் பார்க்க http://hafsa13.blogspot.com/2016/02/12-2.html
பொய்(3) (நேர்மையின்மை2)
நாம் பொய்யுரைக்கவுமில்லை அவதூறு சொல்லவுமில்லை. “சர்வதேசத்தேதிக் கோட்டை ஹிஜ்ரி கமிட்டியினர் கிப்லாவாக ஏற்றுக் கொண்டதாக” நாம் சொல்லவே இல்லை. க்ரெனிச்சைத்தான் ஹிஜ்ரி கமிட்டியினர் கிப்லாவாக ஏற்றுக் கொண்டதாக சொன்னோம்.
அதை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளோம் பார்க்க
கிப்லாவை மாற்றியாயதர்கான ஆதாரங்கள் http://www.piraivasi.com/2017/06/29-1.html
கிப்லாவை மாற்றியது யார்? http://www.piraivasi.com/2017/06/29-2.html
இதை கமிட்டியின் முதன்மைப் பிரச்சாரகர் ஒருவர் சொல்வதை இந்த விடியோவில் கேளுங்கள்



"கிப்லாவுடைய டைரக்''னை மிக நேர்த்தியாக நிர்ணயிக்க கூடிய இடமாக இருப்பது இன்டர்நே''னல் டேட் லைன்" என்கிறார், கஅபா இல்லையாம். மேலும் இவர் சொல்வதுபோல் “ஐடியலுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு அணி அணியாக நின்று தொழுதால்” நீங்கள் எங்கே முகத்துக்கு முகம் சந்திப்பீர்கள்? கஅபாவிலா? க்ரெனிச்சிலா? சிந்தியுங்கள் சகோதரர்களே! கஅபாவை முன்நோக்க சொல்கிறாரா அல்லது க்ரெனிச்சை முன்நோக்கச் சொல்கிறாரா என்று சிந்தியுங்கள். நீங்கள் ஐடிஎல்லை அடிப்படையாக வைத்து கிப்லாவை நிர்ணயம் செய்தால் கஅபாவை முன்நோக்க மாட்டீர்கள், க்ரெனிச்சைத்தான் முன்னோக்குவீர்கள். இவர்கள் கிப்லாவாக க்ரெனிச்சைத்தான் ஆக்கியுள்ளனர். இவர்களின் நாளும் க்ரெனிச் நள்ளிரவில் தான் துவங்குகிறது. இவர்களின் காலண்டரும் க்ரெனிச் நேரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது யூதசதியில் இவர்கள் விழுந்ததைக் காட்டுகிறது. மேலும் விளக்கத்திற்கு பார்க்க piraivasi.com/2015/03/committeeQibla.html
பொய்(4) (நேர்மையின்மை3)
இவர்கள் “கிப்லா திசையை முன்னோக்குவது பற்றி விரிவான ஆய்வறிக்கைகளை நாம் இன்னும் வெளியிடவில்லை” என்பது உலக மகா பொய். இதோ இவர்களின் ஆய்வறிக்கைகள். இவர்களின் காலண்டர் குருவான அலி மானிக் பானின் ஆய்வறிக்கை Meeqatul Qibla and Islamic Calendar எனும் அவரது வெளியீட்டில் இருந்து.
“Meeqath is a fixed place or station to refer a thing or action to be performed. Meeqathul qibla is an imaginary line running from the North Pole to the South Pole, which determines the turn around point towards Qibla for the purpose of Salah. This line coincides with the International Date Line and the people on the either side of this line turn their face away from those on the other side in order that both face the Qibla.”
“All of us are familiar with the word "Meeqat" in connection with the Hajj pilgrimage. As we know, the Meeqat is a fixed place or a station at which the pilgrims don the 'Ihram', that is the pilgrim's garment. Now I am trying to explain about another Meeqat which is very important for the Muslims, - that is "The Meeqatul Qibla". The former Meeqat which we already know is connected with a place and this 'Meeqat' is connected with the place as well as the time, where a traveller going around the Earth has to change his Qibla from east to west or vice versa, his day and his date and the time when the world has to change her day, for example, - from Thursday to Friday.
“I like to name this Date line, which would be established, as 'The Meeqatul Qibla'.”
இதன் மொழிப்பெயர்ப்பு...
“மீக்காத் என்பது ஒரு பொருளை அல்லது ஒரு செயலை செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட இடமாகும். மிகாத்துல் கிப்லா என்பது வட துருவத்திலிருந்து தென்துருவத்தை நோக்கி வரையப்பட்ட கற்பனைக் கோடாகும். தொழுகைக்காக பயன்படும் கிப்லா திசை மாற்றத்தை நிர்ணயிக்கும் இடம் இதுவாகும். மிகாத்துல் கிப்லா எனும் கோடு சர்வதேச கோட்டுடன் ஒருமித்துள்ளது. இந்த கோட்டிற்கு இருபுறமும் மக்கள் ஒருவருக்கொருவர் முகத்தை எதிர் திசையில் திருப்பி (முதுகைக் காட்டிக்)கொண்டு கிப்லாவை முன்னோக்குகிறார்கள்.”
“ஹஜ்ஜுக்கான மீக்காத் பற்றி நாமறிவோம். இப்பொது நான் மற்றொரு மீகாத்தை பற்றி உங்களுக்கு விளக்குகிறேன். அது முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமான மீக்காத் ஆகும். அதுதான் “மிகாத்துல் கிப்லா!”. ஹஜ்ஜுக்கான மீக்காத் “இடத்துடன்” தொடர்புடையது என்பதை நாமறிவோம். (நான் சொல்லும் இப்புதிய) மீக்காத் “இடம் மற்றும் நேரத்துடன்” தொடர்புடையது. அதாவது பூமியை சுற்றி பயணிக்கும் ஒருவர் தனது கிப்லாவை கிழக்கில் இருந்து மேற்காக அல்லது மேற்கிலிருந்து கிழக்காக மாற்றுவதும், அவருடைய தேதியும் நாளும் மாறுவதும், மேலும் பூமியில் கிழமை மாற்றம் நிகழ்வதும் இந்தக் கோட்டில்தான். உதா: வியாழனிலிருந்து வெள்ளிக்கு.”
“இந்த தேதிக்கோட்டிற்கு “அல் மீகாதுல் கிப்லா” என்று நான் பெயரிடுகிறேன்”
இப்போது இருக்கும் சர்வதேச தேதிக்கோட்டில்தான் கிப்லாவின் திசை மாறுகிறதாம். இதுதான் கிப்லாவை நிர்ணயம் செய்யும் பகுதியாம். இந்த வேதவாக்கைதான் மேலுள்ள விடியோவில் கமிட்டி பிரச்சாரகர் வாந்தி எடுத்துள்ளார். இந்த கட்டுரைதான் இவர்களின் கிப்லாவுக்கான வேதவாக்கு. இது கிப்லா தொடர்பாக இவர்களின் ஆசான் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை. இனி இவர்களின் தலைமையகம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளைப் பார்ப்போம்.
இது Shortest distance அல்லது Great circle முறை என்றறியப்படும் கிப்லா நிர்ணயிக்கும் முறை தவறு என்று மேலே காட்டியுள்ள இணையதள முகவரியில் இவர்கள் வெளியிட்டிருந்த ஆய்வு முடிவின் flash animation விளக்கம். உலகத்தில் இருக்கும் அனைத்து மஸ்ஜிதுகளிலும் இந்த முறையில்தான் கிப்லா அமைக்கப்பட்டுள்ளன. இதுதான் சரியான கிப்லா முறை. இதை தவறு என்கிறார்கள்.
(இப்போது அந்த முகவரியில் இந்த அனிமேஷன் இல்லை. நீக்கிவிட்டனர். இவர்கள் பிழையை நாம் சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிழைகளுக்கான ஆதாரத்தை அழித்துவிடுவார்கள். பின்னர் மீசையில் மண் ஒட்டாத கதையாய் பொய் பேசி சமாளிப்பார்கள். இவை நாம் முன்னரே எடுத்துவைத்திருந்த screenshot.)
அந்த அனிமேஷன்களை நாம் இங்கே ஏற்றி வைத்துள்ளோம் https://youtu.be/c1KxxZdWqsQ
மேலுள்ள அனிமேஷனை போட்டு இதுதான் சரியான கிப்லா என விளக்கம் கொடுத்துள்ளனர். இப்படி தட்டையான வரைபடத்தில் நேர்கோடு வரைந்து அதை கிப்லாவாக நிர்ணயம் செய்யும் முறை RHUMB LINE முறை என்றறியப்படும். சில அறிவிலிகள் வட அமெரிக்க நாடுகளில் இவ்வாறு கிப்லாவை ஆரம்பகாலத்தில் அமைத்திருந்தனர். பின்னர் எல்லா பள்ளிகளிலும் கிப்லாக்கள் சரியாக மாற்றப்பட்டுவிட்டன. இந்த விக்கிபீடியா விஞ்ஞானிகள் இன்றளவும் அந்த தவறான கிப்லாவை சரி என்று சொல்கின்றனர். இதை முழுவதுமாக விளக்கி இரண்டு முறைகளிலும் அவற்றிற்குரிய பார்முலாக்களை பயன்படுத்தி எது சரியான கிப்லா எது தவறான கிப்லா என்று தெளிவுபடுத்தி ஒரு கட்டுரையை நாம் வெளியிட்டோம். பார்க்க http://hafsa13.blogspot.com/2015/09/hijiri-committee-qibla.html இதன் பின்னர் சுதாகரித்துக்கொண்ட ஹிஜ்ராவினர் அவர்கள் ஏற்கனவே வெளியிட்டிருந்த ஆய்வு முடிவுகளை அழித்துவிட்டு “கிப்லா திசையை முன்னோக்குவது பற்றி விரிவான ஆய்வறிக்கைகளை நாம் இன்னும் வெளியிடவில்லை” என்று பொய்யுரைக்கின்றனர்.
இந்த வீடியோவையும் காண்க
பொய்(5)
உண்மைதான் சஹாபாக்கள் யாரும் அசிமத் வடிவம் என்று அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் யாரும் நபிகளார் காட்டித்தந்த முஸ்லிம்களின் கிப்லா தவறானது என்றும் சொல்லவில்லை. ஐடிஎல்லை மையமாக வைத்து க்ரெனிச்சை நோக்கி பள்ளிவாயில்களை கட்டவில்லை. கிப்லாவை கஅபாவை நோக்கி நேர்த்தியாகவே நிர்ணயித்தனர்.
அவர்கள் அசிமுத் ப்ரொஜக்ஷ்னை பயன்படுத்தவில்லை பெரிய வட்டத்தையும் பயன்படுத்தவில்லை. ஆனால் சூரியனையும் நட்சத்திரங்களையும் வைத்து கஅபாவை நோக்கி துல்லியமாக கிப்லாவை நிர்ணயித்தனர்.
16:15,16 பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும், நீங்கள் வழியறிவதற்காக பல பாதைகளையும், நதிகளையும், பல அடையாளங் களையும் அவன் அமைத்தான். நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்
6:97 தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழியை அறிந்து கொள்வதற்காக உங்களுக்காக நட்சத்திரங்களை அவனே ஏற்படுத்தினான். அறிகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.
ஹிஜ்ராவினர் நாம் என்னவோ கிப்லாவை அசிமத் ப்ரொஜக்ஷ்னை பார்த்து நிர்ணயம் செய்யச் சொன்னைதைப் போல் மாயையை ஏற்படுத்துகின்றனர். இது நமது கிப்லா ஆய்வுக்கட்டுரை http://hafsa13.blogspot.com/2015/04/PrayerTimes.html. சூரியனைப் பார்த்துதான் கிப்லாவை துல்லியமாக அமைக்கச் சொல்கிறோம்.
பொய்(6) (நேர்மையின்மை4)
நம் பள்ளிவாசல்கள் அனைத்தும் Great Circle பார்முலாவை பயன்படுத்தியே கட்டப்படுகின்றன. கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது (2:115) என்ற வசனத்தை காட்டி கஅபாவை முன்னோக்குவது முக்கியமன்று கிழக்கோ மேற்கோ எங்கு நோக்கியும் தொழலாம் என்று இந்த ஹிஜ்ராவினர் சொல்ல வருகிறார்களா? நவூதுபில்லாஹ்... வேதத்தை தங்களின் விருப்படி திரித்தும் வசனங்களை தங்கள் வசதிப்படி வரிசைப்படுத்தியும் தில்லுமுல்லு செய்வதில் இவர்கள் யூதர்களை மிஞ்சிவிட்டனர். 2:115 வசனம் எப்போது அருளப்பட்டது, அதிலிருந்து என்ன சட்டம் எடுக்கவேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.
முஸ்லிம் 1251. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வாகனத்தில் செல்லும்போது தமது முகமிருந்த திசையில் தொழுதார்கள். இது தொடர்பாகவே "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ் இருக்கிறான்" எனும் (2:115ஆவது) வசனம் அருளப்பெற்றது. 
முஸ்லிம் 1252. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துல்லாஹ் பின் அல்முபாரக் மற்றும் இப்னு அபீசாயிதா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில், "பிறகு இப்னு உமர் (ரலி) அவர்கள் "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ் இருக்கிறான்" (2:115) எனும் வசனத்தை ஓதிக் காட்டிவிட்டு,இது தொடர்பாகவே இந்த வசனம் அருளப்பெற்றது" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. 
நஸாயி 491 இலும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த ஹதீஸ்களுக்கு மேலதிக எந்த விளக்கமும் தேவை இல்லை. ஆம்! பயணத்தில் நீங்கள் எங்கு நோக்கியும் தொழலாம் எனும் வசனம் இது. இதை இந்த கயவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று பாருங்கள். 2:177 இறையச்சத்தை பற்றி பேசுகிறது. எங்கு நோக்கி வேண்டுமெனிலும் தொழுதுகொள்ளுங்கள் என்று சொல்லவில்லை.
இதோ கஅபாவை தவிர வேறு எதையும் நோக்கி தொழக்கூடாது எனும் இறைக்கட்டளை. நீங்கள் எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி தொழுங்கள் என்பது உலகம் முழுமைக்கும் உள்ள கட்டளை.
2:144 (முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்பு வீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! 'இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை' என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.
2:149 நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! அதுவே உம் இறைவனிடமிருந்து கிடைத்த உண்மை. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.
2:150 நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களிடம் உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட் கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!
இது கஅபாவை முன்னோக்குவதை அல்லாஹ் எப்படி வலியுறுத்துகிறான் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
'நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் உள்ளே நுழைந்ததும் அதன் எல்லா ஓரங்களிலும் நின்று பிரார்த்தித்தார்கள். அதிலிருந்து வெளியாகும் வரை அவர்கள் தொழவில்லை. வெளியே வந்தபின்பு கஅபாவின் முன்பாக நின்று இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு 'இதுதான் கிப்லா' என்று கூறினார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
புகாரி 398, நஸாஇ 2915 & 2916
புகாரி 4486. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் (ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கிப் 'பதினாறு மாதங்கள்' அல்லது 'பதினேழு மாதங்கள்' தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (எனவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும் படி ஆணையிட்டு அல்லாஹ் 02:144வது வசனத்தை அருளினான். உடனே, அவர்கள் அஸ்ருத் தொழுகையை (கஅபாவை முன்னோக்கித்) தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். பிறகு அவர்களுடன் தொழுதிருந்தவர்களில் ஒருவர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் 'ருகூஉ' செய்து கொண்டிருந்தனர். அவர், 'அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கிறேன். நான், நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன்' என்று சொல்ல, அவர்கள் அப்படியே (தொழுகையில் ருகூவிலிருந்தபடியே சுற்றி) கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள். (புதிய கிப்லாவான) கஅபாவை நோக்கி கிப்லா மாற்றப்படுவதற்கு முன்பாக (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவைப் பின்பற்றித் தொழுத சிலர் (இறைவழியில்) கொல்லப்பட்டு இறந்துவிட்டிருந்தனர். அவர்களின் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது 'அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை வீணாக்குகிறவன் அல்லன். (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடம் மிகுந்த இரக்கமுடையோனும் கருணையுடையோனுமாவான்' எனும் (திருக்குர்ஆன் 02:143வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். 
பொய்(7) (நேர்மையின்மை-5)
இது திட்டமிடப்பட்ட இருட்டடிப்பு. “கிழக்குக்கும் மேற்கும் இடையே கிப்லா என்று சுருக்கமாக சொல்லிவிட்டார்கள் மதீனாவின் கிப்லா தெற்கு என்று சொல்லவில்லை” என்பது நபி ஸல் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய். நபி ஸல் எதை செய்து கட்டினார்களோ அதை வாயால் சொல்லத் தேவை இல்லை. எனினும் வாயால் சொல்லியும் உள்ளார்கள். இதோ ஹதீஸ் ஆதாரம்.
உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கக் கூடாது. தம் முதுகுப் புறத்தால் பின்னால் ஆக்கவும் கூடாது. கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:. (புகாரி, முஸ்லிம், நசாயி, திர்மிதி, அபீ தாவூத், இப்ன் மாஜா)
புகாரி 4486. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் (ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கிப் 'பதினாறு மாதங்கள்' அல்லது 'பதினேழு மாதங்கள்' தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (எனவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும் படி ஆணையிட்டு அல்லாஹ் 02:144வது வசனத்தை அருளினான். உடனே, அவர்கள் அஸ்ருத் தொழுகையை (கஅபாவை முன்னோக்கித்) தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். பிறகு அவர்களுடன் தொழுதிருந்தவர்களில் ஒருவர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் 'ருகூஉ' செய்து கொண்டிருந்தனர். அவர், 'அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கிறேன். நான், நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன்' என்று சொல்ல, அவர்கள் அப்படியே (தொழுகையில் ருகூவிலிருந்தபடியே சுற்றி) கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள். (புதிய கிப்லாவான) கஅபாவை நோக்கி கிப்லா மாற்றப்படுவதற்கு முன்பாக (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவைப் பின்பற்றித் தொழுத சிலர் (இறைவழியில்) கொல்லப்பட்டு இறந்துவிட்டிருந்தனர். அவர்களின் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது 'அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை வீணாக்குகிறவன் அல்லன். (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடம் மிகுந்த இரக்கமுடையோனும் கருணையுடையோனுமாவான்' எனும் (திருக்குர்ஆன் 02:143வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். 
இப்படி துணிந்து பொய் சொல்வதற்கு தனி நெஞ்சுரம் வேண்டும். துளி இறையச்சம் இருந்தாலும் இவ்வாறு நபி ஸல் மீது இட்டுக்கட்ட மனம் வராது.
பொய்(8)
மேற்படியார் நல்ல கற்பனை வளம் மிக்கவர், டாக்டர் கமால் அப்தலியின் கட்டுரை இதோ http://www.patriot.net/users/abdali/ftp/qibla.pdf அவர் கிப்லா பூமியின் மையத்தில் இருப்பதாக எந்த கருத்தும் வெளியிடவில்லை
பொய்-9
நகைச்சுவை. ICOP அஉதாவை இவர்கள் எப்படி தரம் தாழ்ந்து விமர்சித்தார்கள் என்பது இவர்கள் இணையதளத்தில் இன்றும் உள்ளது
கமால் அப்தலியும் உமர் அஃப்சலும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். ஆனால் இவர்களை சகோதரர் என்கிறார். டாக்டர் பட்டம் பெறாத காலித் ஷவுக்கதை டாக்டர் என்கிறார். காரணம் என்ன தெரியுமா! கமாலும் உமரும் கணிப்புக் கொள்கைக்கு எதிரானவர்கள். ஷவுக்கத் இவர்களைப்போல் க்ரெனிச் கிப்லாக்காரர்.
நமது கட்டுரையைக் காப்பியடித்து நமக்கே வெளியிட்ட உபதேசம் இது. நமது கட்டுரை இதோ http://hafsa13.blogspot.com/2014/12/KaabaCenterofEarth.html இது 2014 டிசம்பரில் வெளியிடப்பட்டது. அன்றே கஅபா பூமியின் மையத்தில் இல்லை என்று டாக்டர் சாகிர் நாயக்கிற்கு மறுப்புக் கட்டுரை எழுதியிருந்தோம். கஅபா பூமியின் மையத்தில் இருப்பதாக நானோ அந்த இரு சகோதரர்களோ சொல்லவில்லை. இவர்களின் அபார கற்பனைகளில் உதித்தவை இவை. நம்மீது அவதூறை வீசுவதையே பொழுதன்றும் வேலையாக வைத்துள்ளனர்.
பொய்(11)
இதை வாசிக்கும் ஹிஜ்ரா கமிட்டி ரசிகர்கள் ஆகா ஓகோ என்று துதி பாடுவார்கள். கிப்லா கணக்கே தெரியாத இவர்கள், தொழுகை நேரங்களைப் பற்றி எதுவும் அறிந்திராத இவர்கள், கோண விகிதத்தைப் பற்றி பேசுவது வேடிக்கை. சந்திரனின் வானியலில் (lunar astronomy) கோண விகிதம் (angular ratio) என்றொரு வார்த்தையே இல்லை. இப்படி இல்லாத எதாவது வார்த்தைகளை பேசுவார்கள். இவர்களின் ரசிகர்களும் எதுவும் புரியாத காரணத்தால் விசில் அடிப்பார்கள். இவர் சொல்லும் அமாவாசை, பிறையின் வடிவங்கள், கிரகணங்கள் என எவற்றிகும் தேதிக்கோட்டுடன் எந்த தொடர்பும் இல்லை. IDL நிறுவப்பட்ட 1884ம் ஆண்டுக்கு முன் நாட்காட்டிகளின் கட்டமைப்பு எப்படி இருந்தது.
விக்கி விஞ்ஞானிகளின் அடுத்த அதிரடி கண்டுபிடிப்பு “தேதிக்கோட்டை மாற்றினால் அதன் அடிப்படையில் பின்நோக்கிக் கணக்கிட்டால் இஸ்லாமிய வரலாற்றின் தேதிகள் மாறுபட்ட நாட்களில் இடம்பெறும்”. இப்படியெல்லாம் அவிழ்த்து விட்டால் எவன் கேள்வி கேட்கப்போகிறான் எனும் நம்பிக்கைதான் இவர்களை இப்படி பேசவைக்கிறது. கமுட்டியினர் தேதிக்கோட்டை மாற்றினால் மக்ரிபுக்கும் இஷாவுக்கும் 3.5 மணி நேர வித்தியாசம் வரும் என்று ஆரம்பத்தில் சொன்னார். ஏம்பா! தேதிக்கோட்டை மாற்றினால் சூரியன் தாமதமாக உதிக்குமா என்று கேட்டோம். நாங்கள் அப்படி சொல்லவே இல்லையே என்று அந்தர் பல்டி அடித்தனர். அதே போல் ஒரு கதைதான் இது. தேதிக்கோட்டை மாற்றினால் இஸ்லாமிய வரலாற்றின் தேதிகள் மாறிவிடுமாம். முதலில் கிப்லா கணக்கையும் தொழுகை நேரக்கணக்கையும் படிங்க... பின்னர் பின்னோக்கி கணக்கிடுவதைப் படிக்கலாம். உங்களுக்கு ஞானமில்லாத விஷயத்தை பேசாதீர்கள். இதெல்லாம் மக்களின் அறியாமையை பயன்படுத்தி தன்னை விஞ்ஞானியாக மாற்றிக்கொள்ளும் யுக்தி. அறிவுடையோர் சிந்திப்பர்.
“முஸ்லிம்கள் முன்னோக்கும் தீர்க்க ரேகை” என்று தலைப்பிட்டு உள்ளே கஅபாவை வைத்து கிப்லாவை நிர்ணயிக்க வேண்டும் என்று சொல்லாமல் ஐடிஎலை வைத்துதான் கிப்லாவை நிர்ணயிக்க வேண்டும் ஐடிஎல் தான் மீக்காது கிப்லா என்று எழுதுவார்கள். அதே கருத்தில் வீடியோ வெளியிடுவார்கள். ஐடியலுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு அணி அணியாக நின்று தொழுதால் காபாவை வந்தடைவோம் என்று மக்களை ஏமாற்றி க்ரெனிச்சை நோக்கி மக்களை தொழச்சொல்வார்கள். இந்த அயோக்கிதனத்தை நாம் தட்டிக்கேட்டால், “திசையை வணங்க சொல்லி பாரதியின் பாட்டை உண்மைப்படுத்தி உங்களை மார்க்கத்தை விட்டு திசை திருப்புகிறார்கள்” என்று நாம் மக்களை எச்சரித்தால் நம்மை தம்பிகள் என்று இவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.
மக்களே காபாவை முன்னோக்குவது முக்கியமில்லையாம். எங்கே நோக்கியும் தொழலாமாம். இந்த யூத நச்சுக்களிடமிருந்து விலகி இருங்கள் மக்களே.
இவர்கள் அல்லாவுக்கே பாடம் எடுக்கிறார்கள். அல்லாஹ் எங்கிருந்தாலும் கஅபாவை முன்னோக்கசொல்கிறான். இவர்கள் அறிஞர் பெருமக்களையெல்லாம் அழைக்கிறார்கள். நபி ஸல் சொன்னதாக இப்ன் உமர் ரலி கூறியதை குறைப் அறிவிப்பது இவர்களுக்கு சம்பவம் ஆகிவிட்டது. ஆனால் அறிஞர்களின் கூற்று அல்லாவின் கூற்றைவிட சிறந்ததாக தெரிகிறது.
பொய்(10) (நேர்மையின்மை6)
இங்கே கொஞ்சம் கவனம் செலுத்தி சிந்தியுங்கள் சகோதரர்களே! முதன்மை நெடுக்கையை முதலில் மக்காவுக்கு மாற்றிவிட்டு பின்னர் எளிதில் ஜெருசலத்திற்கு மாற்றிவிடலாம் என்று யூதர்கள் நினைப்பதாக இவர் எழுதியுள்ளார். இது எந்த அளவு உண்மை என்று நம்மால் அளவிட முடியாது. ஏனெனில் நமக்கு யூதர்களுடன் எந்த தொடர்பும் இல்லை. எனினும் இந்த கருத்தை நாம் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. இந்த கருத்தில் சுத்தமாக லாஜிக்கே இல்லை. ரொம்பக் கஷடப்பட்டு யூதர்கள் முதன்மையை நெடுக்கையை கஅபாவுக்கு மாற்றுவார்களா? கொஞ்சமாவது அறிவுக்கு எட்டுகிறதா? பல எண்ணெய் வளம் மிக்க நாடுகளை வீழ்த்தியவர்கள். பல வல்லரசுகளை தங்கள் மூளையால் வீழ்த்தியவர்கள் இப்படி முட்டாள்தனமாக சிந்திப்பார்களா? கதை சொல்வதாக இருந்தாலும் நம்பும்படியாக சொல்லவேண்டும். கஅபாவை முதன்மை நெடுக்கையாக மாற்றிய பிறகு அங்கிருந்து அதை ஜெருசலத்திற்கு மாற்றுவதை முஸ்லிம்கள் அனுமதித்துவிடுவார்களாம். இவர் சினிமாவில் கதை எழுதுபவரோ? நபி ஸல் அவர்களுக்கு கார்டூன் வரைவதை அனுமதிக்காத சமுதாயம் இது. கஷ்டப்பட்டு முதன்மை நெடுக்கைய கஅபாவிற்கு மாற்றியபின் ஒருவன் கதை சொன்னால் அதைக்கேட்டு இஸ்ரேலுக்கு முதன்மை நெடுக்கையை மாற்ற முஸ்லிம்கள் அனுமதிப்பார்களா?
எனினும் கமுட்டி சொன்னதை நாம் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. இதைப்பற்றி சிந்திக்கத்தான் வேண்டும். தேதிக்கோடு விஷயத்தில் நிச்சயம் யூத சதி இருக்க வாய்ப்பு அதிகம்.
வாய்ப்பு & காரணி-1
நமக்கு யூதர்களுடன் எந்த தகவல் தொடர்பும் இல்லை. எனவே நமக்கு இத்தகைய தகவல்கள் கிடைக்காது. ஆனால் யூதர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு இத்தகைய தகவல்கள் கிடைப்பது சாத்தியமே. இவர்கள் யூதர்களிடமிருந்து ஹிஜ்ரா காலண்டரின் பிரதியை வாங்கச் சென்றபோது இந்த தகவல் லீக் ஆகியிருக்கலாம். இது நமது யூகமே.
வாய்ப்பு & காரணி-2
கஅபாவுக்கு எதிர்முனைதான் தேதிகோட்டிற்கு மிகச்சரியான தேர்வு என்பதை நாம் தகுந்த ஆதரங்களுடன் நிறுவியிருந்தோம். பார்க்க http://hafsa13.blogspot.com/2015/03/committeedateline.html . பிற்காலத்தில் முஸ்லிம்கள் எளிதில் இந்த தேதிக்கோட்டை கஅபாவிற்கு எதிர் முனையில் மாற்றிவிட வாய்ப்பு அதிகம். இதை உணர்ந்துகொண்டு முஸ்லிம்களை இதை செய்ய விடாமல் தடுப்பதற்காக யூதர்கள் இட்ட நெடுநாள் திட்டம்தான் இந்த கிப்லா மாற்றம். யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததைப் போன்று ஸ்பெயினை துடைத்தது போன்று எதையும் மெதுவாக திட்டமிட்டுத்தான் செய்வார்கள். முதலில் அவர்கள் இஸ்லாத்தில் இல்லாத அமாவாசைக் காலண்டர் கொள்கையை மெதுவாக புகுத்தினர். பின்னர் முஸ்லிம்களை க்ரெனிச்சை நோக்கி தொழச்செய்தனர். இப்போது கஅபாவை பார்த்து தொழவேண்டியதில்லை நீங்கள் எங்கு நோக்கினாலும் அல்லாஹ் இருக்கிறான். எனவே எங்கே நோக்கி வேண்டுமெனிலும் தொழுதுகொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். நாளடைவில் முஸ்லிம்கள் கிப்லா என்ற விஷயத்தையே மறந்துவிடுவார்கள். பின்னர் எளிதில் இவர்கள் முதன்மை நெடுக்கையை இஸ்ரேலுக்கு மாற்றிவிடுவார்கள். இதுதான் லாஜிக்காக இருக்கிறது. இதுதான் யூதர்கள் இட்ட சதித்திட்டமாக இருக்கவேண்டும்.
கிப்லாவை கஅபாவிலிருந்து க்ரெனிச்சுக்கு மாற்ற முயற்சித்தனர். அதை நாம் அடையாளப்படுத்தியபோது முஸ்லிம்கள் சுதாகரித்துவிட்டனர். இவர்களின் ப்ளான்-எ பலனளிகவில்லை. இப்போது கையில் எடுத்திருப்பது ப்ளான்-பி. கஅபாவை முன்நோக்க வேண்டியது கட்டாயம் இல்லை. அல்லாவின் முகம் எல்லா திசையிலும் இருக்கிறது என்கின்றனர். முஸ்லிம்களே உஷார். இனி ப்ளான்-ஸி, ப்ளான்-டி எல்லாம் வெளியேவரும். இன் ஷா அல்லாஹ் அனைத்தையும் நாம் அல்லாவின் உதவியுடன் எதிர்கொள்வோம்.
ஜெருசலத்திலிருந்து கிப்லாவை கஅபாவை நோக்கி மாற்றுவதற்காக நபிகளார் வானை நோக்கி ஏங்கி நின்றார்கள். அவர்களாக கிப்லாவை மாற்றிக்கொள்ளவில்லை. அவர்களின் எண்ணத்தை உணர்ந்து அல்லாஹ் கிப்லாவை கஅபாவுக்கு மாற்றிக்கொடுத்தான். நபிகளாரின் வாழ்நாளில் அத்தகைய சிறப்புமிக்க சம்பவம் அது. நபிகளாரின் ஆசை அது. நபிகளார் ஆசைப்பட்டு மாற்றப்பட்ட கிப்லாவை இந்தக் கயவர்கள் க்ரெனிச்சை நோக்கி மாற்றத் திட்டமிட்டனர். அந்த திட்டம் முறியடிக்கப்பட்டவுடன் வழக்கம்போல குர்ஆணை வளைத்து கஅபாவை முன்னோக்குவது மார்க்கத்தில் முக்கியமான காரியம் அல்ல, எனவே கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே எங்கு நோக்கி வேண்டுமெனிலும் தொழுங்கள் என்று பத்வா கொடுகின்றனர்.


உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் 'தடுப்பு' வைத்துத் தொழும்போது, எவரேனும் குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும்; அதை அவர் எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார்
-நபிமொழி; புகாரி 509
தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்
-நபிமொழி; புகாரி 510
நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான்.
-நபிமொழி (யின் ஒரு பகுதி); புகாரி 405
'உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது தம் முகத்துக்கு எதிராக உமிழலாகாது; ஏனெனில் அவர் தொழும்போது இறைவன் அவருக்கு முன்னிலையில் இருக்கிறான்'
-நபிமொழி; புகாரி 406

கிப்லாவை முன்னோக்குவதன் முக்கியத்துவத்தை மேலுள்ள நபிமொழிகள் விளக்குகின்றன. எங்குநோக்கியும் தொழுங்கள் எனும் இத்தகைய யூத சதிகளில் இருந்து அல்லாஹ் நம் சமூகத்தை காப்பானாக.